For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் அவரை கண்டுக்கவே இல்லை.. தோனிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி வீடியோ!

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி நேற்றைய போட்டியின் போது சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

யாரும் அவரை கண்டுக்கவே இல்லை.. தோனிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி வீடியோ!

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி நேற்றைய போட்டியின் போது சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று உலகக் கோப்பை செமி பைனல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் போட்டி முழுக்க நேற்று இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் நேற்று போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய சர்ச்சையாகி உள்ளது.

என்ன போட்டி

என்ன போட்டி

பொதுவாக இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தாலும், பெரும்பாலும் தோனிதான் வீரர்களை வழி நடத்துவார். அதேபோல் கோலியும் கூட முக்கியமான நேரங்களில் தோனியிடம்தான் ஆலோசனை கேட்பார். எனக்கு எப்போதும் தோனிதான் கேப்டன் என்று இப்போதும் கூட கோலி சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் நேற்று போட்டியில் நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று போட்டியில் பாண்டியா பந்து வீசும் முன் அவரிடம் சென்று கோலி ஆலோசனை வழங்கினார். அதன்பின் கோலி, ரோஹித், பாண்டியா மூன்று பேரும் சேர்ந்து ஆலோசனை செய்தார்கள். அப்போது அங்கு வந்த தோனியை இந்த மூன்று பேரும் கண்டுகொள்ளவில்லை.

பார்க்கவில்லை

தோனியை பார்க்காமல் இந்த மூன்று வீரர்களும் பேசிக்கொண்டு இருந்தனர். அதன்பின் தோனியும் அதை பெரிது படுத்தாமல் அப்படியே அவர்களை கடந்து சென்றார். அவர்கள் பேசுவதை தொந்தரவு செய்யாமல், அவர்களிடம் வேண்டும் என்றே சென்று ஆலோசனை வழங்காமல் தோனி விலகி சென்று கீப்பிங் சைடில் நின்றார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ஆனால் முன்பெல்லாம் தோனி இப்படி தனியாக இருந்தது கிடையாது. நேற்றுதான் முதல்முறை இப்படி நடந்தது. நேற்று பெரும்பாலும் ரோஹித் சர்மா, கோலி இரண்டு பேர் மட்டும்தான் மாறி மாறி ஆலோசனை செய்தனர்.

தலைவன்

இந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதே சமயம் சிலர் தோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்கிறார். இதுதான் சரியான விஷயம். அவர் வருங்காலத்திற்கு வழி விடும் தலைவன் என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Story first published: Wednesday, July 10, 2019, 12:33 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
ICC World Cup 2019: A video on Dhoni in yesterday Ind vs NZ match goes viral in Social Media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+