முதல் விக்கெட்டை சரித்த பாண்டியா.. கோபத்தால் பேட்டை உடைத்த பின்ச்.. பகீர் வீடியோ!
Recommended Video
லண்டன்: இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டை இழந்த பின் ஆரோன் பின்ச் செய்த காரியம் ஒன்று பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதும் கோபத்திற்கு பெயர் போனவர்கள். தங்கள் எதிரணி வீரர்களை சீண்டி பார்த்து ஆனந்தம் கொள்பவர்கள். அதே சமயம் தங்கள் அணிக்குள்ளும் அதிகம் கோபம் அடைவார்கள்.
ஆனால் அதை பெரும்பாலும் பொதுவில் காட்டிக் கொள்ளாமல், டிரெஸ்ஸிங் ரூமில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படித்தான் ஆரோன் பின்ச் இன்று ஒரு காரியம் செய்து இருக்கிறார்.

என்ன போட்டி
அதன்படி இன்று ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை இந்திய அணி அடித்த துவைத்து. பஇந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். இதனால் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஆட்டம்
அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா நிதானமாக ஆடியது. இந்திய அணியின் பேட்டிங்கை பின்பற்றி முதல் பத்து ஓவர்களில் பெரியதாக ரன் எதுவும் எடுக்கவில்லை. எவ்வளவு நிதானமாக ஆட முடியுமோ அவ்வளவு நிதானமாக ஆஸ்திரேலியா ஆடியது.

முடியவில்லை
அதே சமயம் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுப்பதற்கு செய்த முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. பும்ரா, புவனேஷ்வர்குமார் போட்ட எந்த பந்தும் விக்கெட்டிற்கு நெருக்கமாக கூட செல்லவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி பவர் பிளேவிற்கு பின் அதைக் பலம் நிலையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் பாண்டியாவின் ஓவரில் பின்ச் தேவையில்லாமல் ரன் அவுட்டானார். கேதார் ஜாதவ் இருந்த திசையில் பந்தை அடித்துவிட்டு, இரண்டு ரன்கள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் ஜாதவ் பாண்டியவை நோக்கி பந்தை வீச, அவர் எளிதாக ரன் அவுட் செய்தார்.
என்ன கோபம்
இதையடுத்து பின்ச் 36 பந்துகளில் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில் டிரெஸ்ஸிங் அறைக்கு சென்ற பின்ச் அங்கு சுவற்றில் பேட்டை வேகமாக வீசி அறைந்து அதை உடைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications