உடலில் காயம்.. மனதில் வலி.. கடைசி நொடி வரை போராட்டம்.. இந்தியர்களின் இதயங்களை வென்ற ஆப்கான் அணி!
லண்டன்: இந்திய அணிக்கு எதிராக நேற்று ஆப்கானிஸ்தான் அணி நிகழ்த்திய போராட்டம் என்பது கிரிக்கெட் உலகின் உணர்வு பூர்வமான சம்பவங்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஆம்.. ஆப்கானிஸ்தான் அணி தனது ஆவி, ரத்தம், வலி அனைத்தையும் மொத்தமாக கொடுத்து இந்திய அணிக்கு எதிராக விளையாடி இருக்கிறது.
நேற்று போட்டி தொடங்கும் முன்பே.. இது இந்திய அணிக்கான போட்டி.. இந்தியாதான் வெல்ல போகிறது என்றுதான் எல்லோரும் கூறினார்கள். இன்னும் சிலரோ ரோஹித் இரட்டை சதம் அடிப்பாரா என்று பார்க்கலாம், போட்டியில் வெற்றிபெறுவது எல்லாம் சாதாரணம் என்று கூறினார்கள்.
இன்னும் சிலர் மேலே போய் போட்டியில் வெற்றிபெறுவது எளிது.. அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதுதான் இந்தியாவின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நேற்று நடந்தது யாருமே.. கிரிக்கெட் உலகமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒன்று.

செம பவுலிங்
ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பை தொடரில் ஆடிய ஆட்டங்களிலேயே இதுதான் மிகவும் சிறப்பான ஆட்டம் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆப்கான் வீரர்கள் நேற்று போட்ட பவுலிங் அவர்கள் வாழ்நாளில் மிக சிறப்பான பவுலிங்.ஆப்கான் நேற்று ஒன்றும் சிறிய அணியுடன் மோதவில்லை. உலகக் கோப்பையை ஜெயிக்க போகிறது என்று எல்லோரும் நினைக்கும் இந்திய அணியை அவர்கள் எதிர்கொண்டார்கள்.

எப்படி விக்கெட்
இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் பவுலர்கள் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்கள். பவுலிங் போட்ட அனைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களும் விக்கெட் எடுத்தனர். நைப் , நபி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதேபோல் ரஷீத் கான், ரஹ்மத் ஷா, முஜீப் உர் ரஹ்மான், அப்தாப் அலாம் ஆகியோர் வரிசையாக ஒரு ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்தியா பேட்டிங்
இதனால் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக பாதித்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான். இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்
ஆனால் அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றாகவே ஆடினார்கள். தொடக்க வீரர்கள் நைப் மற்றும் சாசாய் நிதானமாக ஆடினார்கள். இவர்களின் இணையை முறிக்கவே இந்திய பவுலர்கள் திணறினார்கள். இவர்கள் 27 மற்றும் 10 ரன்கள் இருக்கும் போதுதான் அவுட்டானார்கள். அதேபோல் ரஹ்மத்தும் சஹிதியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார்கள்.

செம பாஸ்
இவர்களை ஜோடியை பிரிக்க இந்திய பவுலர்கள் திணறினார்கள். அதன்பின் கடைசியில் களமிறங்கிய நபி இந்திய பவுலர்களை தெறிக்கவிட்டார். இவர் மட்டும் கடைசி நேரத்தில் 52 ரன்களை எடுத்தார். இவர்தான் இந்திய ரசிகர்ளுக்கு கடைசி நேரத்தில் அல்லுவிட வைத்தது. பும்ரா போட்ட 17வது ஓவரில் கூட இவர்தான் சிக்ஸ் அடித்தது. அந்த அளவிற்கு இவர் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தார். நன்றாக பவுலிங்கும் போட்டார்.

இதயம்
இதில் ரஷீத் கான், ஷாகிதி இருவரும் காயத்துடன் ஆடியவர்கள். ஆனால் இத்தனை பிரச்சனைகள், வலிகள், முயற்சிகளுக்கும் இடையில் இந்திய அணியிடம் நேற்று ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தது. இந்திய அணி ஆப்கான் அணியை விட ஒரு புள்ளி மேலே இருந்தது மட்டும் இதற்கு காரணம்.. ஆப்கானிஸ்தான் அணி போட்டியில் தோற்று இருந்தாலும் மக்களின் இதயத்தை வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications