இப்படியும் நடக்குமா.. பேட்டை பிடுங்கி ஓட விடாமல் தடுத்த ஆப்கான் வீரர்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ!
லண்டன்: ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் நேற்று மோதிய போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. நேற்று இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் மிக முக்கியமான லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது
இந்த போட்டியில் 32வது ஓவரில் முக்கியமான சம்பவம் நடந்தது. அந்த ஓவரை ஆப்கானிஸ்தான் வீரர் குல்தீப் நைப் வீசினார். இயான் மோர்கன் அப்போதுதான் களமிறங்கி பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அவர் அப்போது வெறும் 1 ரன்தான் எடுத்து இருந்தார். அப்போது நைப் போட்ட பந்து, மோர்கன் பேட்டில் பட்டு பவுன்சாகி கொஞ்ச தூரம் சென்றது .

வேகமாக
இதில் வேகமாக சிங்கில் எடுத்துவிடலாம் என்று நைப் நினைத்தார். இதனால் வேகமாக அவர் ஓட முயற்சி செய்தார். ஆனால் ரூட் சிங்கில் எடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் மோர்கனை திரும்பி போக சிக்னல் காட்டினார். இதனால் வேகமாக மோர்கன் மீண்டும் திரும்பி ஓடினார்.

பிடித்து தடுத்தார்
அப்போது பவுலர் நைப் மோர்கனை பிடித்து தடுத்தார். அதோடு அவரின் பேட்டையும் பிடுங்கினார். இதை பார்க்க அவர் வேண்டும் என்றே செய்தது போல இருந்தது. இவர் பேட்டை பிடித்து இழுத்ததால் மோர்கன் தடுமாறினார். ஆனால் சுதாரித்துக் கொண்ட அவர் வேகமாக கீரிசை அடைந்தார். கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் அவர் அவுட்டாகி இருப்பார்.
பேசிக்கொண்டார்கள்
அதன்பின் மோர்கன் இதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தார். நைப், மோர்கன் பேட்டை எடுத்து அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டார் . இருவரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் என்பதால், இவர்கள் இதை பெரிதுபடுத்தவில்லை. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.


Click it and Unblock the Notifications