தெறிக்கவிடும் ஆப்கானிஸ்தான் பவுலிங்.. திணறும் இலங்கை.. இதுதான் சரியான போட்டி!
Recommended Video
லண்டன்: இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் வரிசையாக இலங்கை வீரர்கள் அவுட்டாகி வருகிறார்கள்.
2019 உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 6 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகள் எல்லாமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத போட்டிகள் ஆகும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற முக்கிய அணிகள் கூட தோல்வியை தழுவி உள்ளது. அதே சமயம் வங்கதேசம் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரில் பத்து அணிகள் ரவுண்டு ராபின் முறையில் மோதும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த லீக் சுற்றின் 7வது போட்டியில் தங்களது முதல் ஆட்டத்தில் தோற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இரண்டு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தோடு மோதி வருகிறது.
இதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்றது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்கி உள்ளது. இதில் இலங்கை வீரர்கள் முதலில் அதிரடியாக ஆடினார்கள். திமுத் கருணாரத்னே அதிரடியாக 30 ரன்கள் அடித்து அவுட்டானார்.
குஸல் பெரேரா 76 ரன்கள் அடித்து களத்தில் இருக்கிறார். ஆனால் இவர்களை தவிர வரிசையாக இறங்கிய எல்லா வீரர்களும் அவுட்டானார்கள். லஹிரு திரிமண்ணே 25, குசல் மெண்டிஸ் 2, ஏஞ்ஜலோ மேத்தியூஸ் 0, டி சில்வா 0, திசாரா பெரேரா 2 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி 4 விக்கெட்டும், ஹமித் ஹாசன் 1 விக்கெட்டும் எடுத்தனர். தற்போது இலங்கை 30 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications