Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் போனார்.. அதோடு எல்லாமும் போய்விட்டது.. இந்திய அணியின் தொடர் சொதப்பலுக்கு முக்கிய காரணம்!

லண்டன்: இந்திய அணியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு முக்கியமான வீரர் ஒருவரும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

ஆனால் இந்தியாவிற்கு இன்னும் செமி பைனல் செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். அடுத்து இந்தியா வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

ஆனால் இந்திய அணியின் பேட்டிங் கடந்த மூன்று போட்டிகளாக மோசமாக சொதப்பி வருகிறது. முக்கியமாக தொடக்க வீரர்களும், இந்திய அணியின் மிடில் ஆர்டரும் மோசமாக தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பிரச்சனையில் சிக்குவதற்கும், அதிக ரன்களை எடுக்க முடியாமல் போவதற்கும் இதுவே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தவான் காயம்

தவான் காயம்

கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார். அப்போது 14வது ஓவரில் தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

அணியில் இருந்து நீக்கம்

அணியில் இருந்து நீக்கம்

இதையடுத்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் 4வது இடத்தில் ஆடிக்கொண்டு இருந்த கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். அப்போது தொடங்கிய பிரச்சனைதான் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் நல்ல உடல் தகுதியோடு களமிறங்கியவர்தான் தவான்.

அதிரடி

அதிரடி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவர் அடித்த சதம்தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. ஆனால் அவரின் வலுவான இடத்தை கே எல் ராகுலால் நிரப்ப முடியவில்லை. நேற்று போட்டியில் அவர் டக் அவுட் ஆனார். அதேபோல் இரண்டு போட்டிகளில் அவர் 50 ரன்களுக்கும் குறைவாகவே அடித்தார். மிக மிக மோசமான ஷாட்களை இவர் தொடர்ந்து ஆடி வருகிறார்.

என்ன மோசம்

என்ன மோசம்

அதேபோல் ராகுலுக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையில் சரியான உரையாடல்கள் நிகழ்வது இல்லை. தவான் ரோஹித் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி இவர்கள் இருவரிடமும் இல்லை. இதுவும் தொடக்க 10 ஓவர்களில் இந்தியா தொடர்ந்து சொதப்ப காரணமாக இருக்கிறது. தவான் சென்றதால் மிடில் ஆர்டர் மீதும் அதிக அழுத்தம் வைக்கப்பட்டு வருகிறது.

எல்லாம் போச்சு

எல்லாம் போச்சு

தவான் சென்ற பின் இந்திய அணிக்குள் பின் வரும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கிறது.

1. முதல் 10 ஓவரில் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்துள்ளது.

2. ரோஹித் மீதான பிரஷர் அதிகம் ஆகியுள்ளது.

3. இந்திய அணியின் ஓப்பனிங் அவ்வளவு வலுவாக இல்லை.

4. மிடில் ஆர்டர் மீதான அழுத்தம் அதிகரிப்பதால் தொடர்ந்து இந்திய மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்புகிறார்கள்.

5. பெரிய இலக்குகளை எடுக்க முடிவதில்லை. இதுவே இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Story first published: Monday, July 1, 2019, 12:41 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+