Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசியில் ஏமாற்றிய தல தோனி.. நினைச்சது நடக்கவேயில்லை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Recommended Video

சர்ச்சைக்கு பிறகு தோனி இன்று அணிய போகும் கிளவுஸ் எது ?

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் தோனி அவரது ரசிகர்களை பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்.

எப்போதும் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத நபர்தான் தோனி. கிரிக்கெட் உலகில் டாப் செய்தியாக இருந்தாலும் கூட, தோனி சர்ச்சையில் சிக்கியது கிடையாது.

தன்னை தவறான விஷயங்கள், செய்திகளில் இருந்து எப்போதும் தள்ளி வைப்பதையே இவர் பழக்கமாக வைத்து இருப்பவர். ஆனால் இவரே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கினார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணியின் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுசும் பெரிய சர்ச்சை ஆனது. தோனி தற்போது மிலிட்டரி உடை மாடலில் ஒரு கிளவுஸ் அணிந்து வருகிறார். இதில் பாலிடான் பேட்ச் என்ற முத்திரை உள்ளது. இது இந்திய ராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவின் முத்திரை ஆகும்.

ஏன் பிரச்சனை

ஏன் பிரச்சனை

இதன் வெளிப்பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும். இவரின் இந்த கிளவுஸ் மிகவும் புகழ்பெற்றது. தோனி தற்போது இந்திய ராணுவத்தின் பாராசூட் படையில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதில் அவர் செய்த பயிற்சியின் காரணமாக இந்த பேட்ச் வழங்கப்பட்டது. இதற்குத்தான் ஐசிசி எதிர்ப்பு தெரிவித்தது.

தடை விதித்தது

தடை விதித்தது

அதோடு இந்த பேட்சிற்கு ஐசிசி தடையும் விதித்தது. ஒரு குறிப்பிட்ட ராணுவம், மதம், பிரிவினை, இதை குறிக்கும் வகையில் ஆடை அணிய கூடாது என்ற விதியை குறிப்பிட்டு தோனியின் கிளவுஸிற்கு தடை விதித்தது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பிசிசிஐ வேலைக்கு ஆகவில்லை

பிசிசிஐ வேலைக்கு ஆகவில்லை

அதே சமயம் பிசிசிஐ தோனிக்கு ஆதரவாக களமிறங்கியது. தோனி அந்த கிளவுஸை அணிய அனுமதி அளித்துள்ளோம் என்று கூறியது. ஆனால் ஐசிசி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தோனி கண்டிப்பாக அந்த கிளவுஸை அணிய கூடாது என்று உறுதியாக கூறிவிட்டது. சில கிரிக்கெட் வீரர்கள் கூட தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

என்ன செய்வார்

என்ன செய்வார்

இந்த தொடர் பிரச்சனைகள் சர்ச்சைகள் காரணமாக பாலிடான் பேட்ச் பெரிய வைரலானது. இந்த பேட்சை அணிந்து தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டியில் அதை அணிந்து தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. ரசிகர்கள் எல்லோரும் தோனியின் கிளவுஸை பார்க்க ஆவலோடு இருந்தனர்.

வைரலாகி உள்ளது

வைரலாகி உள்ளது

இதற்காக சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் தோனி அந்த கிளவுஸை அணியாமல் களத்திற்கு வந்தார். பாலிடான் சின்னம் இல்லாத பழைய கிளவுஸை அணிந்து அவர் கீப்பிங் செய்தார். இது ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் தோனி ஐசிசியின் விதியை மதித்ததை பலர் பாராட்டி இருக்கிறார்கள்.

Story first published: Sunday, June 9, 2019, 21:05 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+