Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் நாயகனுக்கு இப்படியொரு நிலையா? பார்க்கவே பரிதாபம்.. அதிர்ச்சி அளிக்கும் போட்டோ!

Recommended Video

World Cup 2019 : AndreRussell Injury: ஐபிஎல் நாயகனுக்கு உலகக்கோப்பையில் இப்படியொரு நிலையா?- வீடியோ

லண்டன்: ஐபிஎல் போட்டியில் கலக்கிய முக்கியமான ஒரு வீரர் உலகக் கோப்பை போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல், தற்போது காயமும் பட்டு அவதிப்பட்டு வருகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை பல சந்தோசமான தருணங்கள் நடந்தேறி இருக்கிறது. ஆனால் சந்தோசமான தருணங்களை விட சோகமான நிகழ்வுகள்தான் இந்த தொடரில் இதுவரை அதிகம் நடந்து உள்ளது.

அதில் மிக முக்கியமான விஷயம் வீரர்கள் காயம் அடைவது. தவான், புவனேஷ்வர்குமார், ரபாடா உள்ளிட்ட பல வீரர்கள் இந்த தொடரில் காயம் அடைந்து இருக்கிறார்கள். அதில் முக்கியமான வீரர் ஒருவர் உள்ளார்.

ரசல் எப்படி

ரசல் எப்படி

மேற்கு இந்திய தீவுகள் அணி சில அதிரடியான வீரர்களை நம்பித்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியது. அதில் ஒருவர் ஆண்ட்ரு ரசல். ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்த இவர் உலகக் கோப்பையில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை .

காயம் அடைந்தார்

காயம் அடைந்தார்

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் அவர் காயம் அடைந்தார். ரசல் காலில் ஏற்பட்ட காயம் பெரிதானது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து பார்த்தனர். அவரின் காலில் காயம் மோசமாக இருந்ததால், அவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆபரேஷன்

இதனால் நேற்று இவருக்கு ஆபரேஷன் நடந்தது. காலில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய அவருக்கு ஆபரேஷன் நடந்தது. இவர் தான் மருத்துவமனையில் படுத்து கிடக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார். எனக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்று இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் போட்டுள்ளார்.

மக்கள் வருத்தம்

மக்கள் வருத்தம்

இதை பார்த்துவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். ரசல் சரியாகி வர வேண்டும். மீண்டும் அதிரடியாக ஆட வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளனர். ஐபிஎல் ரசிகர்கள் பலர் இப்படி கமெண்ட் செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 27, 2019, 9:34 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+