ஒரே ஓவர்.. அடுத்தடுத்து 2 சர்ச்சை.. குறி வைக்கப்பட்ட கெயில்.. களத்தில் நிகழ்ந்த திக் மொமண்ட்ஸ்!
Recommended Video
லண்டன்: நேற்று மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெயில் அம்பயர்களால் தேவையில்லாமல் குறிவைக்கப்பட்டதாக பெரிய புகார் வைக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை பெரிய சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் நடந்த உலகக் கோப்பை போட்டிகள் தற்போது பரபரப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் செல்கிறது.
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடுவர்கள் போட்டியின் போது பாரபட்சம் காட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்த போட்டியில் மேற்கு இந்தியாவின் கெயில் அதிகம் குறி வைக்கப்பட்டார்.

என்ன நடந்தது
நேற்று மேற்கு இந்திய தீவுகள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 288 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது. அப்போது கெயில் மற்றும் லெவிஸ் ஓப்பனிங் இறங்கினார்கள். லெவிஸ் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் கெயில் அதிரடியாக ஆடி வந்தார். அப்போதுதான் அவர் அம்பயர்கள் மூலம் குறி வைக்கப்பட்டார்.

மூன்றாவது ஓவர்
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது ஓவரை மிட்சல் ஸ்டார்க் போட்டார். அந்த ஓவரில் கெயிலுக்கு கேட்ச் விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பந்து கெயிலின் பேட்டில் படவே இல்லை. ஆனாலும் அம்பயர் கஃபனே மூலம் விக்கெட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கெயில் உடனே ரிவ்யூ கேட்டார். அது விக்கெட் இல்லை என்று டிஆர்எஸ் ரிவ்யூ மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உண்மை என்ன
அந்த பந்து கெயிலின் பேட்டில் படவில்லை. மாறாக, அது ஸ்டம்பில் லேசாக உரசி இருக்கிறது. ஆனாலும் பெயில் கீழே விழவில்லை என்பதால் அதற்கும் விக்கெட் கொடுக்க முடியாது. இதனால் கெயில் அந்த பந்தில் தப்பித்தார். ஆனால் அதே ஓவரில் அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்து இருந்தது.
எல்பிடபிள்யூ
மீண்டும் கெயிலுக்கு அதே ஸ்டார்க் ஓவரில் எல்பிடபிள்யூ விக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு கெயில் ரிவ்யூ கேட்டார். இந்த விக்கெட்டும் தவறானது என்று ரிவ்யூ மூலம் தெரிய வந்தது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. களத்தில் பலர் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
மிக மோசம்
அதற்கு பின் இன்னொரு அதிர்ச்சி கெயிலுக்கு காத்து இருந்தது. 5 வது ஓவர் போட்ட ஸ்டார்க் பந்தில் கெயில் எல்பிடபிள்யூ மூலம் அவுட்டானார். ஆனால் அதற்கு முதல் பந்துதான் கெயில் நோ பால் போட்டு இருந்தார். ஆனால் அந்த நோ பாலை அம்பயர் கவனிக்கவில்லை. அதை அவர் கவனித்து ஒருவேளை ஃபிரி ஹிட் கொடுத்து இருந்தால், அந்த பந்தில் கெயில் தப்பித்து இருப்பார்.

ஏன் இப்படி
இப்படி ஒரே போட்டியில் நேற்று மூன்று முறை கெயில் குறி வைக்கப்பட்டது களத்தில் பெரிய அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அம்பயர் கஃபனேவிற்கு எதிராக பலர் கடுமையான புகார்களை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications