இது நியாயமா?.. அவர் எப்படி அங்கே பவுலிங் போடலாம்.. மகன் செய்த காரியத்தால் சர்ச்சையில் சச்சின்?
Recommended Video
லண்டன்: இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் செய்த செயல் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது. இதனால் சச்சினுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்ஸ்மேனாக கிரிக்கெட் உலகில் கொடி நாட்டினார். ஆனால் அவரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்படி கிடையாது. அர்ஜுனுக்கு பவுலிங் செய்யத்தான் ஆசை. அதிலும் அவர் இடதுகையில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று பல நாடுகளில் பயிற்சி எடுத்துவிட்டு தற்போது பல்வேறு கிளப் போட்டிகளில் தீவிரமாக பந்து வீசி விளையாடி வருகிறார் அர்ஜுன். வேகமாக.. அதிவேகமாக ஓடி வந்து, ஸ்டார்க் வீசுவது போன்ற ஸ்டைலில் கையை சுற்றி பந்து வீசுவதே அர்ஜுனின் பந்து வீசும் ஸ்டைல் ஆகும்.

என்ன உதவி
இந்த நிலையில் அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். லண்டனில் நேற்று அவர் இங்கிலாந்து வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியின் போது உதவினார். இங்கிலாந்து வீரர்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்து வீசினார். இங்கிலாந்து ஆஸ்திரேலியா போட்டி நடக்க உள்ள நிலையில், நேற்று அர்ஜுன் அவர்களுக்கு பந்து வீசி வலை பயிற்சியின் போது உதவினார். நாள் முழுக்க இங்கிலாந்து வீரர்களுடன் அவர் இருந்தார்.

எப்படி சர்ச்சை
இதுதான் தற்போது பிரச்சனையாகி இருக்கிறது. சச்சின் மகன் தன்னுடைய பவுலிங் திறனை அதிகரிக்க எங்கு வேண்டுமானாலும் சென்று பவுலிங் போடட்டும். அதனால் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏன் உலகக் கோப்பை நேரத்தில் இப்படி இங்கிலாந்து வீரர்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

செய்யவில்லை
இந்திய வீரர்கள் கூடத்தான் நெட் பிராக்டிஸ் செய்ய பவுலர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக பயிற்சி செய்ய ஒரு கை குறைந்து இருக்கிறது. ஆனால் அர்ஜுன் ஏன் அங்கு எல்லாம் என்று பவுலிங் செய்யவில்லை. சச்சின் இந்திய முன்னாள் வீரராக இருந்து கொண்டு ஏன் இப்படி செய்கிறார் என்று சிலர் விமர்சனம் வைத்து இருக்கிறார்கள்.

எப்படி அர்ஜுன்
ஆனால் அர்ஜுன் ஏற்கனவே இந்திய அணி வீரர்களுக்கு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடரின் போதெல்லாம் பவுலிங் போட்டு உள்ளார். இந்திய அணியினருடன் பல முறை அவர் வலைபயிற்சியில் உதவி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சில மாதம் முன் இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக அவர் இங்கிலாந்து வீரர்களுக்கு பயிற்சியின் போது பவுலிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications