For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க யாரையும் காணோம்.. இந்திய அணிக்கு களத்தில் கிடைத்த வாவ் சர்ப்ரைஸ்.. ஷாக்கான ஆஸி. அணி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கிடைத்து இருக்கிறது.

Recommended Video

World Cup 2019 - இந்திய அணிக்கு களத்தில் கிடைத்த வாவ் சர்ப்ரைஸ்

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கிடைத்து இருக்கிறது. இந்திய அணியே நினைத்து பார்க்காத சர்ப்ரைஸ் அளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டி உச்சகட்ட பரபரப்பில் செல்கிறது. முக்கியமாக தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பெரிய அணிகள் தோல்வியை தழுவி வருவதால் ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா மோதும் போட்டி தற்போது ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் களம்

டாஸ் களம்

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. கும்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பவுலிங் கணிக்க மிகவும் கடினமாக இருப்பதால் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது. ஒரு ஓவருக்கு 4 என்ற கணக்கில் வீரர்கள் ரன் எடுத்து வருகிறார்கள்.

இந்திய ரசிகர்கள் அதிகம்

இந்திய ரசிகர்கள் அதிகம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களே அதிகம் நிறைந்து இருந்தார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்கள்தான் இந்த போட்டியை காண அதிகம் வந்திருந்தனர். மக்கள் இருக்கும் இடம் முழுக்க நீல நிறத்தில் மட்டுமே இருந்தது.

அதிர்ச்சி அடைந்தனர்

இதை பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் களத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இருந்தனர். மிக மிக குறைந்த எண்ணிக்கையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் இருந்தனர்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

பொதுவாக வெளிநாடுகளில் ஆடும் நேரத்தில் அங்கு வசிக்கும் தங்கள் நாட்டு ரசிகர்களின் ஆதரவு அதிகம் தேவைப்படும். அதுதான் ஆட்டத்தை உற்சாகப்படுத்தும். ஆனால் இன்று ஆஸ்திரேலியா இந்தியா மோதும் போட்டியின் நிலை அப்படி இல்லை. சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவது போல மைதானம் முழுக்க இந்தியர்கள் மட்டுமே இருந்தனர்.

பெரிய ஆதரவு

பெரிய ஆதரவு

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இவர்கள் இந்தியா இந்தியா... ஹிட்மேன் ஹிட்மேன் என்று கத்தி ஆதரவு அளித்து வருகிறார்கள். இது இந்திய வீரர்களுக்கு ஆச்சர்யம் அளித்து இருக்கிறது. என்ன இங்கிலாந்தில் இத்தனை ரசிகர்களா நமக்கு என்று ஆச்சர்யத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து எப்படி

அதேபோல் இங்கிலாந்து நாட்டு ரசிகர்களும் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் பரம வைரிகள். இதனால் ஆஸ்திரேலியா வீரர்களை வெறுப்பேற்றும் பொருட்டு அவர்கள் எல்லோரும் இந்திய அணிக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 9, 2019, 17:10 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: Audience gave a surprise to IND in the match against Australia today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+