Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அச்சோ போச்சே.. நாங்கள் நினைச்சது நடக்கலை.. ஆரம்பமே புலப்பும் ஆஸி அணி.. ஏன் தெரியுமா?

Recommended Video

டாஸ் வென்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

லண்டன்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது.

2019 உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பத்து அணிகள் ரவுண்டு ராபின் முறையில் மோதும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய போட்டிகளால் தற்போதுதான் ஆட்டம் உண்மையில் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

முக்கியமான அணிகள் பல அதிர்ச்சி தோல்வியை இந்த தொடரில் சந்தித்து வருகிறது. அதே சமயம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் வெற்றிக்கு குறி வைத்துள்ளது.

இன்று மோதல்

இன்று மோதல்

ரவுண்டு ராபின் முறையில் அணிகள் மோதுவதால் எல்லா அணிகளும், எல்லா அணிகளையும் இந்த தொடரில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நிலையில் இந்த லீக் சுற்றின் 14வது போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இரண்டு அணிகளும் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தோடு மோதி வருகிறது.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் கொண்டு வரப்படுவார், நாதன் நைல் மற்றும் உஸ்மான் குவாஜா நீக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்திய அணி எப்படி

இந்திய அணி எப்படி

அதேபோல்தான் இந்திய அணியிலும் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இதுகுறித்து விராட் கோலி கூறும் போது, நாங்கள் அதே 11 வீரர்களுடன் விளையாட போகிறோம். இதில் மாற்றம் எதுவும் இல்லை. நாங்கள் நல்ல சமநிலை அணியாக இருக்கிறோம். அதனால் அணியில் இப்போது மாற்றம் எதையும் செய்ய விருப்பமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வருத்தம்

வருத்தம்

இந்த நிலையில் டாஸில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச், எல்லாம் போய்விட்டது. நாங்கள் டாஸ் வெல்வோம் என்று நினைத்தோம். நாங்கள்தான் முதலில் பேட்டிங் செய்வோம் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை., என்று மிகவும் வருத்தமாக குறிப்பிட்டார்.

ஏன் வருத்தம்

ஏன் வருத்தம்

போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில் தற்போது பிட்ச் மிகவும் வறண்டு இருப்பதால் முதலில் களமிறங்கும் அணி அதிக ரன்கள் எடுக்க முடியும். அதன்பின் பிட்ச் ஸ்விங் ஆகும் என்பதால் அந்த ரன்னை சேஸ் செய்வது கடினமாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி தொடக்கத்திலேயே பின்னடைவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 9, 2019, 15:00 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+