அந்த ஒரு இடம்.. 2 தமிழக வீரர்கள் போட்டி.. யாருக்கு லக்.. இப்படித்தான் வாய்ப்பு அளிக்கப்படுமாம்!
Recommended Video
லண்டன்: இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு இரண்டு வீரர்களுக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. இருவரில் ஒருவருக்கு இன்று இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நினைத்தை விட சிறப்பாக விளையாடி வருகிறது. முக்கியமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிரடியாக ஆடி மற்ற நாட்டு பவுலர்களுக்கு கிலி ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இத்தனைக்கும் மத்தியில்தான் இந்திய அணிக்கு இரண்டு நாட்களுக்கு முன் அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.

என்ன அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யார் இறங்குகிறார்
இதனால் அவரின் இடத்தில் தற்போது கே எல் ராகுல் விளையாட உள்ளார். இதனால் கே எல் ராகுல் விளையாடிய 4வது இடம் காலியாகிறது. அந்த இடத்தில் யாரை விளையாட வைப்பது என்று தெரியாமல் எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். 4வது இடத்தில் விளையாட நிறைய வீரர்கள் ஆர்வமாக இருப்பதால் சரியான வீரர்களை அங்கு தேர்வு செய்ய பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

முடிந்தது
முக்கியமாக தினேஷ் கார்த்திக் , விஜய் சங்கர் இடையே அந்த இடத்தில் களமிறங்க போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும்தான் அந்த இடத்திற்கு தற்போது முதல் தேர்வாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி தேர்வு
இந்த நிலையில் இரண்டு பேரில் பெரும்பாலும் விஜய் சங்கர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். இவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்ற விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி விஜய் சங்கர் பவுலிங் மட்டும் பேட்டிங் செய்ய கூடிய நபர். இதனால் இவர் நல்ல ஆல் ரவுண்டராக இருப்பார். இதனால் தினேஷ் காரத்திக்கிற்கு பதிலாக அவருக்கு முன்னுரிமை அளித்து இருக்கிறார்கள்என்று தகவல் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications