Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த 4 சம்பவங்கள்.. ஒரே நாளில் சிக்கலில் மாட்டிய பிசிசிஐ.. பரபர

Recommended Video

WORLD CUP 2019: Rayudu retires : தொடர் புறக்கணிப்பால் கோபம்!.. ஓய்வை அறிவித்தார் ராயுடு!- வீடியோ

லண்டன்: பிசிசிஐ அமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நாளில் நடந்த நான்கு சம்பவங்களால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பல சர்ச்சைகள், காயங்கள், திருப்பங்களுடன் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவதும், போட்டியில் இருந்து பாதியில் வெளியேறுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று பிசிசிஐ ஒரே நாளில் நான்கு முறை பிரச்சனையில் சிக்கியது. சில சர்ச்சைகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பிசிசிஐ குழம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.

முதல் சர்ச்சை

முதல் சர்ச்சை

இதில் முதல் சர்ச்சை அம்பதி ராயுடு ஓய்வு. நேற்று இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பண்ட், விஜய் சங்கர், மயங்க் அகர்வால் ஆகியோரை விட அதிக ரன்கள் எடுத்து இருந்தும் கூட இந்திய அணியில் இவர் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக இவர் ஓய்வு பெற்றார். பிசிசிஐ அமைப்பின் அதீத ஈகோ காரணமாக அம்பதி ராயுடுவின் வாழ்க்கையே போய்விட்டது என்று நேற்று பிசிசிஐ கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

அதே சர்ச்சை

அதே சர்ச்சை

அதை தொடர்ந்து நேற்று கவுதம் கம்பீர் இது தொடர்பாக டிவிட் செய்து இருந்தார். அம்பதி ராயுடுவிற்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பி அவர் டிவிட் செய்து இருந்தார். பெரும்பாலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கம்பீர் விளையாட்டுத்துறை அமைச்சராக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பாஜக எம்பியாக இருக்கும் ஒருவர் பிசிசிஐ அமைப்பை விமர்சனம் செய்தது பெரிய சர்ச்சையானது.

ஜடேஜா எப்படி

ஜடேஜா எப்படி

இதெல்லாம் போக நேற்று கிரிக்கெட் வீரர் ஜடேஜா, வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கரை டேக் செய்து, நான் உங்களை விட அதிக போட்டிகள் விளையாடி இருக்கிறேன். கொஞ்சம் அளவாக பேசுங்கள் என்று குறிப்பிட்டார். மஞ்சரேக்கர் வீரர்களை மோசமாக வர்ணனை செய்து பல முறை சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் இவர் மீது பிசிசிஐ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து செயல்படுவதும், ஸ்டார் நிறுவனம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடைசியாக என்ன

கடைசியாக என்ன

அதோடு இந்த உலகக் கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற போகிறார் என்று நேற்று செய்திகள் வெளியானது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியா விளையாடும் கடைசி உலகக் கோப்பை போட்டி எதுவோ அந்த போட்டியில் இருந்தே தோனி ஓய்வு பெறுவார் என்கிறார்கள். இந்த செய்தி நேற்று வெளியானதும் பலர் பிசிசிஐ அமைப்பிற்கு எதிராக கோபமாக டிவிட் செய்தனர்.

ஒரே நாள்

ஒரே நாள்

இப்படி ஒரே நாளில் அம்பதி ராயுடு, தோனி, கம்பீர், ஜடேஜா என்று முக்கிய வீரர்களால் பிசிசிஐ அமைப்பு தொடர் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2019, 10:55 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+