Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை ஏற்றுக்கொள்ள முடியாது.. இனி இப்படி நடந்தால் அவ்வளவுதான்.. நேற்றைய போட்டியால் கோபத்தில் பிசிசிஐ!

லண்டன்: இலங்கை மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நடந்த முக்கிய சம்பவம் ஒன்றை குறித்து பிசிசிஐ கோபமாக கருத்து தெரிவித்துள்ளது.

நேற்று உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது லீக் ஆட்டத்தை ஆடியது. முதலில் களமிறங்கிய இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

இந்தியா வெறும் 3 விக்கெட் இழப்பில் 43.3 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளது.

என்ன சம்பவம்

என்ன சம்பவம்

இந்த போட்டியின் போது வானத்தில் இரண்டு விமானங்கள் பறந்தது. சரியாக போட்டி நடக்கும் நேரத்தில் இந்த விமானம் பறந்தது. அதில் ஒரு விமானத்தில் பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும்'' என்று போஸ்டர் பறந்தது. இன்னொரு விமானத்திற்கு பின் ''காஷ்மீருக்கு நீதி வேண்டும் - இனப்படுகொலையை நிறுத்து'' என்று போஸ்டர் பறந்து கொண்டு இருந்தது.

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

போட்டி நடக்கும் போதே இந்த விமானம் பறந்தது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவை கோபத்திற்கு உள்ளாக்கும் வகையில் இந்த விமானம் பறந்தது. ஏற்கனவே பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோல் ''பலுசிஸ்தான் விடுதலை வேண்டும்'' என்று பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக விமானத்தின் மூலம் போஸ்டர் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலடி

அதற்கு பதிலடி

பாகிஸ்தான் போட்டியில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் செய்ததற்கு பதிலடியாக இந்தியா விளையாடும் போட்டியில் அதே போல சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ஐசிசி அமைப்பு இந்த சம்பவம் நடந்தது பெரிய அதிர்ச்சியை அளிப்பதாக டிவிட் செய்து உள்ளது. இதற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் நேற்றே டிவிட் செய்து இருந்தனர்.

ஏன் கோபம்

ஏன் கோபம்

இதுதான் தற்போது பிசிசிஐ அமைப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. இனி இப்படி நடந்தால் அவ்வளவுதான், நாங்கள் கண்டிப்பாக பாகிஸ்தான் மீது புகார் அளிப்போம். அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, July 7, 2019, 13:27 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+