Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித்தான் வேண்டும்.. தோனியால் மாற்றப்படும் கோலியின் பதவி.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்!

Recommended Video

Captain Rohit : பறிபோகும் கோலியின் பதவி?.. பிசிசிஐ முடிவிற்கு பரபரப்பு காரணம்!- வீடியோ

டெல்லி: இந்திய அணியின் கேப்டன் கோலியின் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று செய்திகள் வருகிறது.

உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து அணிக்குள் நிறைய பிரச்சனைகள் நிலவி வருகிறது. உலகின் தலை சிறந்த அணியாக இருந்தும் கூட இந்தியாவால் உலகக் கோப்பையில் பைனலுக்கு செல்ல முடியவில்லை.

இன்னும் சில நாட்களில் மும்பையில் பிசிசிஐ மீட்டிங் நடக்க உள்ளது. இந்திய அணியின் தோல்வி குறித்து இதில் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த மீட்டிங்கில் இந்திய அணியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புள்ளது. கோலி பெரும்பாலும் டெஸ்ட் அணிக்கு மட்டுமே இனி கேப்டனாக இருப்பார் என்று கூறுகிறார்கள்.

ஒருநாள் அணி

ஒருநாள் அணி

மாறாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆம் டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டன் என்று இரண்டு கேப்டன்களை இந்திய அணி நியமிக்க உள்ளது. 2023 உலகக் கோப்பைக்காக இந்த முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளது.

கோலி

கோலி

கோலியை விட ரோஹித்திடம் அதிக தலைமைப் பண்பு இருக்கிறது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து நான்கு கோப்பைகளை மும்பைக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார். அவர்தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ நினைக்கிறது.

ஏன் மாற்றம்

ஏன் மாற்றம்

இந்த மாற்றத்திற்கு தோனியும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் தோனி இருக்கும் வரை அவர் கோலியை கண்டிப்பாக வழி நடத்துவார். பீல்டிங் நிற்க வைப்பதில் கோலியை தோனிதான் வழிநடத்தி வருகிறார். ஆனால் இந்த வருடம் தோனி ஓய்வு பெற்ற பின் கோலி தனித்து விடப்பட வாய்ப்புள்ளது. தோனி இல்லாமல் கோலி திணறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இதனால் தோனி இருக்கும் வரை கோலி கேப்டனாக இருந்தது ஓகே. தோனி சென்ற பின் ரோஹித் சர்மா கேப்டனாக மாறுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Story first published: Tuesday, July 16, 2019, 10:36 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+