Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத்தமாக மாற்ற போகிறோம்.. விரும்பியவர்கள் வரலாம்.. பிசிசிஐ முடிவால் அதிர்ச்சியில் முன்னாள் வீரர்கள்!

Recommended Video

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட வாய்ப்பு?

டெல்லி: இந்திய அணியில் மொத்தமாக சில மாற்றங்களை செய்ய பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி பல வகைகளில் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அணிக்குள் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

அணிக்குள் மட்டும் மாற்றங்கள் இல்லாமல் அணி நிர்வாகத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறுகிறார்கள். இதற்காக முக்கிய கூட்டம் ஒன்று இன்னும் சில நாட்களில் பிசிசிஐ சார்பாக நடத்தப்பட உள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றம் செய்ய முடிவு

மாற்றம் செய்ய முடிவு

இன்னும் 12 நாட்களில் இந்த நீட்டிப்பு முடிகிறது. அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும். இதற்காக இப்போதே பிசிசிஐ ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பங்களை வரவேற்க முடிவெடுத்து உள்ளது.

முடிவு என்ன

முடிவு என்ன

அதன்படி புதிய திருப்பமாக இந்த முறை பயிற்சியாளர் நியமனத்தை வெளிப்படையாக நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதற்கான தங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் மற்ற நிர்வாகிகள் ஆகியோரை தேர்வு செய்ய வெளிப்படையாக விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

ஏன் அதிர்ச்சி

ஏன் அதிர்ச்சி

தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. *இப்படி வெளிப்படையாக பயிற்சியாளரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்து இருப்பது சில முன்னாள் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. முன்பு போல் பிசிசிஐ தனி ஆலோசனை கூட்டம் நடத்தி ரகசியமாக பயிற்சியாளரை தேர்வு செய்தால், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலருக்கு பயிற்சியாளருக்கான வாய்ப்பு கிடைத்து இருக்கும். ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இதனால் இந்த முறை இந்திய அணியின் பயிற்சியாளராக வெளிநாட்டை சேர்ந்த நபரே அதிகம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நிறைய முன்னாள் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக மாற ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

யார்

யார்

இது முன்னாள் இந்திய வீரர்களின் கனவை கலைத்துள்ளது. பயிற்சியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்பது இவர்களின் வாய்ப்பை பறிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் இந்திய அணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Tuesday, July 16, 2019, 12:13 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+