
என்ன நடக்கிறது
தற்போது உலகக் கோப்பை தொடர் பல்வேறு மொழிகளில் உலகம் முழுக்க ஒளிபரப்பப்படுகிறது. இந்தியாவிலும் முக்கிய மொழிகளில் மட்டும் உலகக் கோப்பை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்தில் கிரிக்கெட்டுக்கு 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்
அதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தமிழிலும் இதற்காக சேனல் தொடங்கி உள்ளது. இதில் கிரிக்கெட் குறித்த செய்திகள் வர்ணனைகள் எல்லாம் தமிழில் இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து கிரிக்கெட் உலகில் சாதனை செய்தவர்களும் இதில் வர்ணனை செய்வார்கள்.

சர்ச்சையாவது வழக்கம்
பொதுவாக இந்த தமிழ் வர்ணனையில் ஆர்ஜே பாலாஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பாவனா ஆகியோர் வர்ணனை செய்து வருகிறார்கள். இவர்கள் செய்யும் வர்ணனை பெரிய அளவில் ஹிட் அடித்து வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் இவர்கள் பேசுவது சர்ச்சையாகியும் இருக்கிறது .

இப்போது என்ன
இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பாக தொகுப்பாளர் பாவனா வெளியிட்ட டிவிட் ஒன்று பெரிய ஹிட் அடித்து உள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை தொகுத்து வழங்கிய பாவனா, பிரைன் லாராவுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தினார். அதுகுறித்து அவர் டிவிட் செய்துள்ளார்.
என்ன டிவிட்
பாவனா அதில், இரண்டு இடதுகைக்காரர்கள் ஒரே புகைப்படத்தில் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு லாரா என்ன நீங்களும் இடதுகையில் பவுலிங் பேட்டிங் செய்வீர்களா, உங்களாலும் அப்படி செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு பாவனா காமெடியாக இல்லை இல்லை நான் இடதுகை என்று சொன்னது சாப்பிடுவதையும் எழுதுவதையும் மட்டும்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் லாராவை ஜென்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











