For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு அடுத்த ஷாக்.. வழுக்கி காலில் அடிபட்ட புவனேஷ்வர்குமார்.. பாதியில் வெளியேறி அதிர்ச்சி!

இந்திய அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான புவனேஷ்வர்குமார் காலில் அடிபட்டதால் போட்டியின் பாதியில் வெளியேறினார்.

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர், எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே!

லண்டன்: இந்திய அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான புவனேஷ்வர்குமார் காலில் அடிபட்டதால் போட்டியின் பாதியில் வெளியேறினார். இவர் மீண்டும் களத்திற்கு வருவாரா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்தது.

அதன்பின் களமிறங்கிய இந்தியா மிகவும் அதிரடியாக ஆடியது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அதிரடியாக ஆடியது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்த வலுவான ஸ்கோரை எதிர்த்து தற்போது பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது. பாகிஸ்தான் அணி இந்திய பவுலிங்கில் திணறி வருகிறது.

யார் அதிக ரன்கள்

யார் அதிக ரன்கள்

இந்திய அணியில் கே எல் ராகுல் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார்.கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இதேபோல் பாகிஸ்தான் வீரர்களும் அதிரடியாக ஆடினால் மட்டுமே இந்தியாவின் இலக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் பாகிஸ்தான் இந்திய அணியின் பவுலிங் இணையான புவனேஷ்வர் குமார், பும்ரா பவுலிங்கில் பெரிய அளவில் திணறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் புவனேஷ்வர் குமார் ஓவர் போடும் போதும் காயம்பட்டார். பிட்சில் அவர் சென்று கொண்டு இருக்கும் போதே வழுக்கியதால் காயத்திற்கு உள்ளானார்.

சென்றார்

சென்றார்

இதனால் 4 பந்துகள் போட்ட அவர் பாதியில் பெவிலியன் திரும்பினார். அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சோதனை முடிந்த பின்பே ஆட்டத்தில் மீண்டும் இறங்குவாரா, இறங்க மாட்டாரா என்பது குறித்து தெரிய வரும். இதனால் இந்திய அணிக்குள் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இந்திய அணியில் இன்னொரு முக்கியமான வீரரான தவான் ஏற்கனவே காயம் அடைந்து இருக்கிறார். தற்போது அவரும் கூட 2 வார ஓய்வில் இருக்கிறார். இந்த நிலையில் இன்னொரு முக்கியமான வீரரான புவனேஷ்வர் குமார் காயம்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 21:21 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
ICC World Cup 2019: Bhuvneshwar Kumar left the ground after he slipped while bowling against Pakistan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+