Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாயில் பட்டு ஸ்டம்பில் விழுந்த பந்து.. மிக மிக மோசமாக அவுட்டான பாக். வீரர்.. வைரல் வீடியோ!

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபஹர் சமான் விக்கெட் ஆன விதம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபஹர் சமான் விக்கெட் ஆன விதம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இங்கிலாந்து அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையில் போட்டிகள் நடைபெற்றது.

இந்த முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடியது. மிக எளிதாக 100+ ரன்களில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் பேட்டிங்

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது . இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்ய முடிவு செய்தது.

ஏன் பவுலிங்

ஏன் பவுலிங்

இங்கு சேசிங் செய்வது மிகவும் எளிதான காரியம் ஆகும். இதனால் பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய மேற்கு இந்திய தீவுகள் அணி அழைத்தத. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக முதலில் நிதானமாக ஆடியது. ஆனால் கொஞ்ச நேரத்தில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது.

வரிசையாக விக்கெட்

வரிசையாக விக்கெட்

இமாம் உல் ஹக் இரண்டு ரன்களில் அவுட்டானார். அதன்பின் வரிசையாக வந்த எல்லோரும் அவுட்டானார்கள். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபஹர் சமான் விக்கெட் ஆன விதம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

எப்படி ஆனார்

எப்படி ஆனார்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபஹர் சமான் மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஆண்ட்ரு ரசல் பந்தில் அவுட்டானார். ஃபஹர் சமான் களத்திற்கு வந்ததும் , ஆண்ட்ரு ரசல் நல்ல பவுன்சர் பந்து ஒன்றை போட்டார். இதை எதிர்கொள்ள முடியாத ஃபஹர் சமான், அந்த பந்தை முகத்தில் வாங்கினார்.

வாயில் பட்டு விக்கெட்

இதில் அந்த பந்து ஃபஹர் சமான் வாயில் பட்டது. ஹெல்மெட் இருந்ததால் ஃபஹர் சமான் தப்பித்தார். ஆனால் பந்து வேகமாக ஹெல்மெட்டில் பட்டதில், நேரடியாக ஸ்டம்பில் சென்று விழுந்தது. இதனால் எதிர்பாராமல் ஃபஹர் சமான் அவுட்டானார்.

பெரிய வைரல்

இந்த விக்கெட் தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இது மட்டுமில்லாமல் பாகிஸ்தானில் அதற்கு பின் களமிறங்கிய எல்லோரும் வரிசையாக இப்படித்தான் சீட்டு கட்டு போல சரிந்தனர். பாகிஸ்தான் பேட்டிங் மிக மோசமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, May 31, 2019, 17:35 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+