Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வரை போராடிய கரீபியன்.. அந்த ஒரு ஷாட்டால் வந்த வினை.. மே. இந்திய தீவுகள் போட்டியில் திக் திக்!

லண்டன்: நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் உடைந்து அழுத சம்பவம் பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி மிக தீவிரமாக நடந்தது. கடைசியில் இந்த போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்றது.

அதேபோல் நேற்று மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியும் கடைசி வரை மிகவும் திரில்லாக இருந்தது. கடைசியில் நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வென்றது.

எப்படி வென்றது

எப்படி வென்றது

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டிற்கு 291 ரன்களை எடுத்தது. இந்த எளிதான ஸ்கோரை எடுத்துவிடும் என்ற நிலையில்தான் மேற்கு இந்திய தீவுகளின் பேட்டிங் இருந்தது.142 ரன்களுக்கு வெறும் 3 விக்கெட்டோடு விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 211 ரன்களுக்குள் 8 விக்கெட்டை இழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியில் கெயில் மட்டுமே தொடக்கத்தில் அதிரடியாக ஆடினார்.

இல்லை

இல்லை

கெயில் 87 ரன்களுக்கு அவுட்டான பின் வரிசையாக மேற்கு இந்திய தீவுகள் வீரர்கள் அவுட்டானார்கள். அதன்பின்தான் ஆறாவது வீரராக பிராத்வைட் இறங்கினார். அவர் மட்டும்தான் ஒரு பக்கம் மேற்கு இந்திய தீவுகள் அணியில் நிதானமாக ஆடினார் . ஆனால் அவருக்கு எதிரில் நின்ற வீரர்கள் எல்லாம் வரிசையாக சீட்டு கட்டு போல சரிந்தார்கள்.

2 விக்கெட் மட்டுமே

2 விக்கெட் மட்டுமே

வெறும் இரண்டு விக்கெட் மட்டுமே மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிச்சம் இருந்தது. அதில் 80 ரன்களை எடுத்ததால்தான் வெற்றி. எப்படியும் மேற்கு இந்திய தீவுகள் அணி வெல்லாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் பிராத்வைட் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை . இன்று நான்தான் மேட்ச் வின்னர், கரிபியனின் கடைசி சொட்டு ரத்தம் வரை போராடும் என்று களத்தில் உறுதியாக நின்றார்.

ஐந்து சிக்ஸ்

ஐந்து சிக்ஸ்

ஐந்து சிக்ஸ், ஒன்பது பவுண்டரி என்று கையில் கிடைத்த பந்துகளை எல்லாம் பறக்கவிட்டார். போல்ட் , லோகி, நீசாம் என்று எந்த ஒரு பவுலரையும் அவர் விட்டுவைக்கவில்லை. வெறும் 82 பந்துகளில் அவர் செஞ்சுரி அடித்தார். 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்று மேற்கு இந்திய தீவுகள் வரும் வரை, பிராத்வைட் தனது அதிரடியை குறைக்கவில்லை. ஆம், 80 ரன்கள் தேவைப்பட்ட மேற்கு இந்திய தீவுகளை, 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.

கண்ணீர் விட்டார்

கண்ணீர் விட்டார்

சரியாக 49வது ஓவரின் கடைசி பால். ஆறு ரன் அடித்தால் வெற்றி. இன்னும் ஒரு ஓவர் வேறு மீதம் இருக்கிறது. ஆனால் கடைசி பந்தில் சிங்கிள் அடிக்காமல், அடுத்த ஓவரில் ஸ்டிரைக் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்று அந்த பந்தை சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார் பிராத்வைட். ஆனால் அங்குதான் அவர் தவறு செய்தார். நீசம் போட்ட அந்த பந்தை அவர் பறக்கவிட அது சரியாக லாங் ஆன் திசையில் இருந்த போல்ட் கையில் போய் அகப்பட்டது. நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பாவம்

பாவம்

பிராத்வைட் களத்திலேயே அப்படியே உட்கார்ந்து அதிர்ச்சி ஆனார். அவருக்கு கண்ணீரும் வந்தது. உடனே அங்கு வந்த நியூசிலாந்து வீரர்கள் அவரை தேற்றினார்கள். கேன் வில்லியம்சன் ஆறுதலாக பேசினார். அதேபோல் மேற்கு இந்திய தீவுகளின் வீரர்களும் பிராத்வைட் அருகே வந்து அவருக்கு ஆறுதலாக பேசினார்கள். அவரின் அணியில் ஒரே ஒரு வீரர் அவருக்கு உதவி செய்து இருந்தால் கூட இந்த இலக்கை அடைந்து இருக்க முடியும்.. அவர் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தும் தோற்றுப்போய்விட்டார் என்றுதான் கூற வேண்டும் .

Story first published: Sunday, June 23, 2019, 16:31 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+