அட கடவுளே.. பாண்டியா, ஜாதவ் இரண்டு பேருக்கும் என்னாச்சு.. வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!
லண்டன்: இந்திய வீரர்கள் பாண்டியா மற்றும் கேதார் ஜாதவ் குறித்து வெளியான வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது.
இந்திய அணிக்கு கிடைத்து இருக்கும் முத்து என்றால் அது ஹர்திக் பாண்டியாதான். முக்கியமான நேரங்களில் களமிறங்கி அதிரடியாக ஆடுவது. தேவையான நேரங்களில் விக்கெட் எடுப்பது என்று மிகவும் சிறப்பாக பாண்டியா விளையாடி வருகிறார்.
முக்கியமாக இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்கும் நேரங்களில் இவர் எடுக்கும் விக்கெட்டுகள் மற்றும் ரன்கள்தான் இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருந்துள்ளது.

ஆனால் என்ன
பொதுவாக பாண்டியா செய்யும் குறும்பான விஷயங்கள் வைரலாகி வருவது வழக்கம். தோனியிடம் இவர் எடுத்த பேட்டி, கிரிக்கெட் வீரர்களுக்கு பிஸ்கெட் கொடுத்த வீடியோ, நடுவர்களை காமெடியாக கிண்டல் செய்யும் வீடியோ என்று இவரின் வீடியோக்கள் நிறைய இணையத்தில் வைரலாகி உள்ளது. அப்படித்தான் இன்றும் முக்கியமான வீடியோ வெளியாகி உள்ளது.

என்ன வீடியோ
நேற்று இந்திய அணி பவுலிங் செய்யும் முன் வட்டமாக எல்லா வீரர்களும் சேர்ந்து நின்று ஆலோசனை செய்தனர். அப்போது கேதார் ஜாதவ், ராகுல், பின் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து நின்றனர். இந்த நிலையில் ஜாதாவும் பாண்டியாவும் அப்போது கையை மாறி மாறி பிசைந்து கொண்டு இருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் இப்படி மாறி மாறி கையை பிசைந்தனர்.

வைரலானது
காதலர்கள் போல இவர்கள் நடந்து கொண்ட இந்த வீடியோதான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி இருக்கிறது. ஆம், இவர்கள் ஏன் இப்படி கையை மாறி மாறி பிசைந்து கொள்கிறார்கள். இவர்களுக்குள் என்ன நடக்கிறது பாஸ் என்று இணையத்தில் நெட்டிசன்கள் பலர் கேள்வி கேட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொருவர்
இதேபோல் ஆஸ்திரேலியா வீரர்கள் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் நிறைய வெளியாகி உள்ளது. தற்போது இந்திய வீரர்கள் இருவரின் வீடியோ வெளியாகி வைரலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவிற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பேசி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications