Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. வேகமாக ஓடி தடுமாறி விழுந்த பும்ரா.. என்ன ஆனது.. மருத்துவர்கள் சோதனை!

லண்டன்: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் பும்ரா கீழே விழுந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய அணியின் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

ஆடிவருகிறது

ஆடிவருகிறது

இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் ஆடி வருகிறது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வங்கதேசம் 190 ரன்களை எடுப்பதற்கு முன்பே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இன்னும் சில ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும். ஆனால் இந்த அணிக்கு இதற்கு இடையில் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

என்ன பும்ரா

என்ன பும்ரா

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் பும்ரா கீழே விழுந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாண்டியா போட்ட பந்தில் சென்ற பவுண்டரி ஒன்றை இவர் தடுங்க வேகமாக ஓடினார். அப்போது பந்தை சரியாக பிடித்தவர் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் கீழேயே விழுந்து சில நிமிடம் துடித்தார். அதன்பின் வேகமாக மருத்துவர்கள் அங்கே வந்தனர்.

சோதனை செய்கிறார்கள்

சோதனை செய்கிறார்கள்

அதன்பின் பும்ரா களத்தில் இருந்து வெளியேற ஓய்வு பெற சென்றார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்து வந்தார். மருத்துவர்கள் பும்ராவை தீவிரமாக சோதனை செய்தனர். அவருக்கு காலில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டது.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

ஆனால் இதனால் அவருக்கு பெரிய அளவில் சிக்கல் இல்லை என்கிறார்கள். இன்றைய போட்டியிலேயே அவர் மீண்டும் அணிக்குள் வந்து விளையாடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்போது ஓவர் போட மாட்டார். கடைசியில்தான் இவருக்கு பெரும்பாலும் ஓவர் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, July 2, 2019, 22:26 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+