Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் அவர்.. உடனே டீமில் எடுங்க.. அசாத்திய கேட்ச் மூலம் உலக வைரலான கேமரா மேன்! - வீடியோ

Recommended Video

World Cup 2019: அசாத்திய கேட்ச் மூலம் உலக வைரலான கேமரா மேன்!- வீடியோ

லண்டன்: நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேமரா மேன் பிடித்த கேட்ச் ஒன்று பெரிய வைரலாகி உள்ளது.

நேற்று வங்கதேசத்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை தொடரில் விளையாடிய இரண்டாவது போட்டியாகும் இது. ஆனால் இந்த போட்டியில் தென்னாபிரிக்கா அணி மிக மோசமாக வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது.

வலுவான வங்கதேசம் அணியின் 330 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் தென்னாபிரிக்கா அணி தோல்வி அடைந்தது. இந்த தென்னாபிரிக்கா அணிக்கு இரண்டாவது தோல்வியாகும்.

முடிவு

முடிவு

தென்னாபிரிக்க அணியில் டு பிளசிஸ் 62 ரன்கள் எடுத்தார். டுமினி, மார்க்கரம் 45 ரன்கள் எடுத்தனர். மில்லர் 38, டுஸ்சென் 41 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியால் 50 ஓவரில் 303 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி தோல்வி அடைந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த போட்டியில் தென்னாபிரிக்க வீரர் டு பிளசிஸ் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த போது லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார். சரியாக பெவிலியனை நோக்கி இந்த பந்து சென்றது. அப்போது அங்கு கேமரா மேன்கள் இருந்த இடமாக பார்த்து சென்று இந்த பந்து விழுந்தது.

யார் ஓவர்

யார் ஓவர்

அந்த ஓவரை மோசதாக் ஹுசைன் போட்டார். அப்போதுதான் டு பிளசிஸ் சிக்ஸ் அடித்தார். அப்போது அங்கு லாங் ஆனில் கேமரா மேனாக இருந்தவர் இயான் கிங்க்டன். இவர் சரியாக பந்து வரும் திசையில் அமர்ந்து இருந்தார். இவர் ஒற்றை கையில் பெரிய லென்ஸுடன் கேமரா இருந்தது.

இயான் பிடித்தார்

இயான் பிடித்தார்

கையில் ஒரு பக்கம் கேமரா இருந்தாலும் இன்னொரு கையால் பந்தை அசால்ட்டாக பிடித்தார் இயான். அதுவும் தனது இடத்தில் இருந்து எந்திரிக்காமல் அமர்ந்து கொண்டே இயான் அந்த பந்தை பிடித்தார். உட்கார்ந்து கொண்டே, மிக சாதாரணமாக எளிதாக அந்த கேட்சை பிடித்தார்.

பெரிய வைரல்

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இணையம் முழுக்க இந்த வீடியோ வைரலாகி உள்ளது. யார் பாஸ் இவர், சூப்பரா கேட்ச் பிடிச்சு இருக்காரே என்று பலர் அவரை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரே நாளில் இவர் ஹீரோவாக மாறியுள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதுகுறித்து அவர் தற்போது பேட்டியும் அளித்துள்ளார். அதில், நான் பெரிதாக கிரிக்கெட் விளையாடியது இல்லை. நண்பர்களுடன் அவ்வப்போது கிரிக்கெட் விளையாட செல்வேன். கிரிக்கெட் போட்டிகளுக்கு கேமரா மேனாக சென்றுள்ளேன். அந்த அனுபவம்தான் எனக்கு உதவியது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, June 3, 2019, 13:45 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+