Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்!

லண்டன்: பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு வாரியத்தை கலைக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் போட்டி இரண்டு நாட்களுக்கு முன் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மிக மோசமாக தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு இது மிக மோசமான காலகட்டம் என்றுதான் கூற வேண்டும். வரிசையாக களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பாகிஸ்தான் அணி மோசமாக தோல்வியை சந்தித்து வருகிறது.

மோசமாக தோல்வி

மோசமாக தோல்வி

இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதுவே பெரிய விமர்சனங்களை சந்தித்தது. இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்தது. மழையால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மோசம்

மோசம்

இந்த தொடர் முழுக்கவே பாகிஸ்தான் இப்படித்தான் தோல்வி அடைந்து வருகிறது. இந்த தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் தடைபட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளை மட்டுமே பெற்று, புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மேலே 9வது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி இனி தொடர்ச்சியாக வெற்றிபெற்றாலும் கூட பெரும்பாலும் செமி பைனலுக்கு நுழைவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதிலும் இந்திய அணிக்கு எதிராக அந்த அணி அடைந்த தோல்வி அந்நாட்டு ரசிகர்களை பெரும் கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப்பில் இருக்கும் குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில், பாகிஸ்தான் அணியை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அணி, தங்கள் நாட்டிற்கு அவமானத்தை தேடி தருகிறது, பாகிஸ்தான் அணியின் தோல்வியால் உலக நாடுகள் நம்மை கேவலமாக பார்க்கிறது என்று கூறி வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணியின் தேர்வு வாரியத்தை உடனே கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இல்லை

இல்லை

ஆனால் இந்த வழக்கு தொடுத்தவரின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Wednesday, June 19, 2019, 12:09 [IST]
Other articles published on Jun 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+