Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானங்களுக்கு சிக்சால் பதில் சொன்ன நாயகன்.. பாக். பவுலர்களை புரட்டி எடுத்த கெயில்.. ருத்ர தாண்டவம்

Recommended Video

World cup 2019: WI vs PAK | பாக். பவுலர்களை புரட்டி எடுத்த கெயில்! ருத்ர தாண்டவம்- வீடியோ

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர் கெயில் சிக்ஸ் மழை பொழிந்து வருகிறார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இன்று பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது . இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் ஆல் அவுட் ஆனது. வெறும் 105 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து வருகிறது.

முன்னணி வீரர் கெயில்

முன்னணி வீரர் கெயில்

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியில் தற்போது முன்னணி வீரர் கெயிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆடும் லெவனில் அவர் இன்று இடம்பெற்றார். நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் மேற்கு இந்திய தீவுகள் அணியில் ஆடும் கிறிஸ் கெயில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் எல்லாவற்றிற்கும் பதில் அளித்துள்ளார்.

கெயில் எப்படி

கெயில் எப்படி

மேற்கு இந்திய தீவுகள் அணி கெயிலை எப்படி எல்லாம் அவமானப்படுத்துமோ அப்படி எல்லாம் அவமானப்படுத்தி இருக்கிறது. அவரை மிக மோசமாக அந்த அணி நிர்வாகம் சென்ற ஆண்டு வரை நடத்தியது. நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மூத்த வீரர்கள் எல்லோருமே மோசமாக நடத்தப்பட்டனர்.

ஏன் அவமானம்

ஏன் அவமானம்

கெயிலுக்கு அணி நிர்வாகம் போதிய அளவு சம்பளம் கொடுக்கவில்லை. அணியின் வெற்றிக்கு பாடுபட்டாலும், சரியான மதிப்பில்லை. முக்கியமாக பல மாதங்கள் அணியில் வாய்ப்பே கொடுக்கப்படாமல் இருந்தார். இதனால் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் கூட இருந்தார் என்றே கூறலாம்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எல்லா வருடமும் இவர் அணிகள் மாறி மாறி விளையாடினார். அப்படியே மாறி மாறி விளையாடினாலும், இவர்களுக்கு ஆடும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆச்சர்யமாக கெயில் தற்போது உலகக் கோப்பைக்காக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி விளையாடி வருகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

இந்த நிலையில் தொடக்கத்தில் இருந்தே கெயில் சிறப்பாக ஆடி வருகிறார். வெறும் 17 பந்துகள் பிடித்த அவர் 33 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு பவுண்டரி அடக்கம். அடுத்தடுத்து அடித்த இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். வயது, புறக்கணிப்பு எதை பற்றியும் கவலைப்படாமல் அவர் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்.

எப்போதும் கெத்து

எப்போதும் கெத்து

கரீபியன் வீரர்கள் யாருமே மேற்கு இந்திய தீவுகள் அணியில் சரியாக மதிக்கப்படவில்லை. ஆனால் அதே வீரர்கள்தான் உலகக் கோப்பை தொடங்கி அனைத்து போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பிராவோ, ஆண்ட்ரு ரசல் தொடங்கி பலர் இப்படி இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்த உலகக் கோப்பை போட்டியின் ஹீரோக்கள்.

Story first published: Friday, May 31, 2019, 18:34 [IST]
Other articles published on May 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+