Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பை தொடரே வேண்டாம்.. உடனே நிறுத்துங்கள்.. ஐசிசிக்கு எதிராக கொதிக்கும் ரசிகர்கள்!

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உடனே ரத்து செய்ய வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்தான் இதுவரை நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர்களிலேயே மிகவும் மோசமான கிரிக்கெட் தொடர் ஆகும். சரியான தொடக்க நிகழ்ச்சி இல்லாமல் நடந்த போதே இந்த கிரிக்கெட் தொடர் விமர்சனத்திற்கு உள்ளானது.

அது மட்டுமில்லாமல் ஆடுகளம் எல்லாம் பேட்டிங் பிட்சாக மாற்றப்பட்டு இருந்தது. இங்கிலாந்து பவுலிங் பிட்ச் என்று நினைத்து வந்தவர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் அளித்தது.

இன்னும் மோசம்

இன்னும் மோசம்

இந்த நிலையில் இன்னும் மோசமாக இங்கிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் வரிசையாக மழை காரணமாக ரத்தாகி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் மழை காரணமாக ரத்தாகி உள்ளது. ஏற்கனவே மழை காரணமாக இலங்கை வங்கதேசம், இலங்கை பாகிஸ்தான், மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

ஏன் இப்படி

உலகக் கோப்பை போட்டியில் இதற்கு முன் இத்தனை போட்டிகள் இப்படி ரத்து செய்யப்பட்டது கிடையாது. இதற்கு முன் சில உலகக் கோப்பை தொடர்களில் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சில தொடர்களில் இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த தொடரில் மட்டும்தான் முதல்முறையாக மூன்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இங்கிலாந்து முழுக்க மிக மிக மோசமாக மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை போட்டி மிக மோசமாக தடை பட்டு இருக்கிறது. இங்கிலாந்தில் இப்போது மட்டுமில்லாமல் இனியும் கூட மோசமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. இங்கிலாந்தில் இது மழை காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோசம்

மோசம்

இதனால் இதுவரை இப்படி ஒரு மோசமான கிரிக்கெட் தொடரை பார்த்ததே இல்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இதுதான் மிக மோசமாக நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை தொடர். இதை நடத்துவதற்கு ஐசிசி தொடரையே ரத்து செய்துவிட்டு போகலாம் என்று கூறி வருகிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 16:31 [IST]
Other articles published on Jun 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+