For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானங்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.. புதிய பலத்துடன் அணிக்கு ரிட்டர்ன்.. வார்னிங் தரும் வார்னர்!

ஆஸ்திரேலிய முன்னணி வீரர் டேவிட் வார்னர் மிகவும் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி வந்து இருக்கிறார்.

Recommended Video

World cup 2019 AUS VS AFG | ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை சமாளித்து ஆப்கானிஸ்தான் போராட்டம்!

லண்டன்: ஆஸ்திரேலிய முன்னணி வீரர் டேவிட் வார்னர் மிகவும் வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி வந்து இருக்கிறார்.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன், வார்னர் ஆகியோர் மீது புகார் வைக்கப்பட்டு, அது நிரூப்பிக்கப்பட்டதால் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் சென்ற வருடம் கேப்டன், துணை கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித், வார்னர் நீக்கப்பட்டனர். தடை முடிந்து இவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

என்ன போட்டி

என்ன போட்டி

தென்னப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் உப்புத்தாள் கொண்டு பந்தை தேய்த்து இருக்கிறார்கள். இதை பாக்கெட்டில் மறைமுகமாக வைத்து கொண்டு வந்துள்ளனர். பந்தை மாற்றும் போது, உப்புத்தாளை வைத்து தேய்த்து இருக்கிறார்கள். பந்து நன்றாக சுழல வேண்டும் என்று இப்படி செய்தார்கள்.

மிக மோசம்

மிக மோசம்

இது வீடியோவாக வெளியானது. இதனால் ஆஸ்திரேலிய விளையாட்டு அமைச்சகம் இருவருக்கும் எதிராக கருத்து தெரிவித்தது. அந்நாட்டு பிரதமர் கூட ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தடை விழுந்தது

தடை விழுந்தது

இந்த குற்றத்தை ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கேப்டன் பதவியில் ஸ்மித் நீக்கப்பட்டார். ஆஸி. அணியின் துணை கேப்டன் வார்னரும் நீக்கப்பட்டார். இவர்கள் மீது ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை முடிந்து இவர்கள் திரும்பி வந்துள்ளனர்.

உலகக் கோப்பை அணி

உலகக் கோப்பை அணி

இவர்கள் இருவரும் தற்போது உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று ஆஸ்திரேலியாவிற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இவர்கள் இருவரும் களமிறங்கினார்கள். ஆப்கானிஸ்தான் 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

செம அதிரடி

செம அதிரடி

அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 3 விக்கெட்டிற்கு 209 ரன்கள் எடுத்து வென்றது. டேவிட் வார்னர் 89 ரன்கள் எடுத்தார். முக்கியமாக டேவிட் வார்னர் தொடக்கத்தில் இருந்து மிகவும் அதிரடியாக ஆடி வந்தார். வார்னர் 8 பவுண்டரி அடித்து 114 பாலில் 89 ரன்கள் குவித்தார். வார்னர் விக்கெட்டை எடுக்க ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பல முயற்சி செய்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியிலேயே தான் எவ்வளவு பார்மில் இருக்கிறேன் என்பதை நிரூபித்தார். தற்போது உலகக் கோப்பை போட்டியிலும் தன்னை நிரூபித்து இருக்கிறார். அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு இவர் களத்திற்கு வந்துள்ளார். இவரை கண்டிப்பாக எதிர்கொள்வது எதிராய் பவுலர்களுக்கு சிரமமான காரியம்தான்.

Story first published: Sunday, June 2, 2019, 14:41 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC World Cup 2019: David Warner's form will help AUS to life the trophy once again.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+