For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ரன்னில் திக் திக்.. பயமுறுத்திய கோலி.. மீசையை முறுக்கிய தவான்.. செஞ்சுரி போட்டது இப்படித்தான்

Recommended Video

சச்சின், கங்குலி சாதனையுடன் இணைந்து கலக்கிய தவான்.. !!

லண்டன்: ஆஸ்திரேலிய பவுலர்களை தெறிக்கவிட்டு அதிரடியாக சதம் அடித்து மீண்டும் பார்மிற்கு திரும்பி இருக்கிறார் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்.

தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ரோஹித், தவான், கோலி என்று இறங்கும் வீரர்கள் எல்லோரும் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

இவர்கள் அதிரடியால் தற்போது இந்திய அணி 200 ரன்களை கடந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 300 ரன்களை இந்திய அணி தாண்ட வாய்ப்புள்ளது.

நிதானமாக

நிதானமாக

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து தவான் நிதானமாக ஆடி வந்தார். முக்கியமாக ஆட முடியாத பந்துகளை கவலையின்றி விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலிய வீரர் நைல் பந்துகள் எதையும் ஷிகர் தவான் முதல் பத்து ஓவருக்குள் தொடவே இல்லை. இதனால் அவர் திணறுவது போலவே இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் முதல் பவர் பிளே முடிந்த பின் மீசையை முறுக்க தொடங்கினார் தவான். என் பேரில் மட்டும் வான் இல்லை நான் அடிக்கிற பந்தும் வான்லதான் இருக்கும் என்று கூறிக்கொண்டு, ஆஸ்திரேலியா வீரர்கள் போட்ட பந்துகள் அனைத்தையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டார்.

ஸ்டார்க் கும்மின்ஸ்

ஸ்டார்க் கும்மின்ஸ்

முதலில் ஸ்டார்க் மற்றும் கும்மின்ஸ் ஓவர்களில் தவான் திணறினார். ஆனால் அதெல்லாம் ருத்ர தாண்டவம் ஆடுவதற்கான ரிகர்சல் என்று பின்புதான் தெரிந்தது. இப்போ அயர்ன் மேன் ''டோனி ஸ்டார்க்கே'' இல்லை சாதாரண மேன் மிட்சல் ஸ்டார்க் மட்டும் என்ன பெரிய ஆளா என்று மிட்சல் ஸ்டார்க் போட்ட பந்தில் எல்லாம் பவுண்டரி பறக்கவிட்டார்.

அப்பர் கட்

அப்பர் கட்

அதேபோல் இவர் கடந்த சில மாதங்களாக அடிக்காமல் இருந்த புல் ஷாட், அப்பர் கட், லோவர் கட் என அனைத்து விதமான ஷாட்களையும் தைரியாமாக ஆடினார். ரோஹித் ஒரு பக்கம் அவுட்டாகி இன்னொரு பக்கம் கோலி திணறிக் கொண்டு இருந்தார். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார் தவான்.

திக் திக்

திக் திக்

முக்கியமாக 92 முதல் 100 ரன்களை கடக்க மட்டும் 3 ஓவர் எடுத்துக் கொண்டார். அதிலும் 99 ரன் இருக்கும் போது தேவையில்லாமல் ரன் ஓட முயற்சி செய்து கோலி அவுட்டாக பார்த்தார். அதே பந்தில் கிடைத்த ஓவர் த்ரோ மூலம் செஞ்சுரி அடித்து மட்டையை உயர்த்திய மீசையை முறிக்கினார் தவான்.

பார்மிற்கு திரும்பினார்

பார்மிற்கு திரும்பினார்

இதன் மூலம் நீண்ட மாதங்களுக்கு பின் மீண்டும் தவான் பார்மிற்கு திரும்பி இருக்கிறார். இவர் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணியில் இவர் மட்டும்தான் பார்மில் இல்லாமல் இருந்தார். உலகக் கோப்பை தொடங்கி உள்ள நிலையில் அவரும் வலுவான ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து நம்பிக்கை அளித்துள்ளார்.

Story first published: Sunday, June 9, 2019, 17:52 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: Dhawan came back to form after hitting a century against Aussie in today match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+