Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவலைப்படாதீங்க பாஸ்.. ஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி!

Recommended Video

ஒருவழியாக டாக்டர்கள் சொன்ன குட் நியூஸ்.. மகிழ்ச்சியில் இந்திய அணி!

லண்டன்: இந்திய அணிக்கு தொடர் அதிர்ச்சி செய்திகளுக்கு இடையில் கடைசியாக தற்போது ஒரு நல்ல செய்தி சொல்லப்பட்டு இருக்கிறது.

பாவம்.. இந்திய அணி வரிசையாக இரண்டு போட்டிகளை வெற்றியுடன் தொடங்கினாலும் சந்தோசப்படும் மனநிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் அணியில் தவானுக்கு ஏற்பட்டு இருக்கும் காயம்.

தவானுக்கு ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக வரிசையாக அணிக்குள் நிறைய குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. தவானின் இடத்தில் யாரை ஆட வைக்கலாம் என்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இந்த காயம் பெரிதாகி, பெரிய அளவில் வீங்கியது குறிப்பிடத்தக்கது.

என்ன முடிவு

என்ன முடிவு

நேற்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள். பிசிசிஐ தவானை சோதனை செய்துவிட்டு, அவரை கண்காணிப்பில் வைக்க முடிவெடுத்து இருக்கிறது.

மீண்டும் ஸ்கேன்

மீண்டும் ஸ்கேன்

இந்த நிலையில் தவானுக்கு இன்று மீண்டும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்த முறை தவானுக்கு புதிய சில மருத்துவர்கள் சோதனை செய்தனர். ஸ்கேன் முடிவில் தவானின் காயம் ஆறுவதற்கு மூன்று வாரம் தேவையில்லை. அதற்கு முன்பாகவே காயம் ஆறிவிடும் என்று கூறி இருக்கிறார்கள்.

எப்போது ஆறும்

எப்போது ஆறும்

அதன்படி தவானின் விரலில் ஏற்பட்டு இருக்கும் காயம் வரும் 25ம் தேதிக்குள் ஆறிவிடும் என்று கூறி இருக்கிறார்கள். இதனால் இந்திய வீரர்கள் சந்தோசத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் தவான் இல்லாமல் இந்திய அணி எளிதாக இரண்டு வாரங்களை சமாளித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏன் சிக்கல் இல்லை

ஏன் சிக்கல் இல்லை

அதன்படி நாளை நியூஸிலாந்திற்கு எதிராக இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. 22ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாடுகிறது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா எளிதாக வென்றுவிடும்.

இரண்டே போட்டி

இரண்டே போட்டி

அதனால் அந்த போட்டியில் தவான் இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை. மீதம் இருக்கும் பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டிகளை மட்டும் தவான் இல்லாமல் இந்திய அணி சமாளிக்க வேண்டும். அதை எளிதாக மாற்று வீரர்களை வைத்து சாதித்து விடலாம். இந்த மருத்துவர்களின் அறிக்கையால் தற்போது இந்திய அணி உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, June 12, 2019, 17:11 [IST]
Other articles published on Jun 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+