Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் லண்டனில்தான் இருப்பார்.. அதிரடி முடிவு எடுத்த பிசிசிஐ.. தவானை வைத்து மாஸ் திட்டம்!

லண்டன்: இந்திய அணியில் காயம் அடைந்து இருக்கும் தவானை வீட்டிற்கு அனுப்பாமல் லண்டனிலேயே வைத்திருக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அவரை வைத்து முக்கிய திட்டம் ஒன்றை பிசிசிஐ போட்டுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் தவான் காயம் காரனாக அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடி வந்தார்.

அப்போது தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். நைல் அந்த ஓவரில் பெரிய பவுன்சர் ஒன்றை போட்டார். இந்த பவுன்சர் சரியாக தவானின் இடது கையில் உள்ள கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது.

கூடாது

கூடாது

இதனால் பெரிதும் அவர் கஷ்டப்பட்டார். இதையடுத்து இன்று மருத்துவர்கள் அவருக்கு வீக்கம் வடியாமல் இருந்ததால் ஸ்கேன் செய்தனர். அதன் முடிவுகள் தவானுக்கு எதிராக வந்தது. இதனால் அவரை உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்

மூன்று வாரங்களுக்கு நீக்கப்பட்டு இருக்கிறார். இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால் அவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் ரசிகர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

என்ன வாய்ப்புகள்

என்ன வாய்ப்புகள்

இதனால் தவானுக்கு பதில் அணியில் யாரை எடுக்கலாம் என்று நிறைய விவாதங்கள் நடந்து வந்தது. கே. எல் ராகுலை அவரின் இடத்தில் ஆட வைத்துவிட்டு. ராகுலின் இடத்தில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் அல்லது ரிஷப் பண்டை இறக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

இது தொடர்பாக பிசிசிஐயும் ஆலோசனை நடத்தியது. ஆலோசனையில் யாரை அந்த இடத்தில் விளையாட வைக்கலாம் என்று தொடர்ந்து விவாதம் செய்தனர். இதில் சரியான முடிவை எடுக்க மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனது. விராட் கோலியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார்.

என்ன முடிவு

என்ன முடிவு

அதன்படி தவானின் இடத்தில் யாரையும் இறக்க வேண்டாம். தவான் லண்டலில் இருக்கட்டும். அவருக்கு காயம் சரி ஆகிறதா என்று பார்க்கலாம். அதன்பின் முடிவை எடுக்கலாம் என்று இந்திய அணி முடிவு எடுத்து இருக்கிறது. அது வரை தவானுக்கு பதில் வேறு ஒரு வீரரை இறக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

எப்படி

எப்படி

அதாவது தவான் எப்போதும் போல லண்டனில் அணியுடன் இருப்பார். அவர் உடலை தொடர்ந்து சோதிப்பார்கள். அவர் சரியானவுடன் மீண்டும் அணியில் எடுப்பார்கள். பெரும்பாலும் அவர் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, June 11, 2019, 21:42 [IST]
Other articles published on Jun 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+