Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி போடாதே.. ஷமிக்கு தோனி கொடுத்த அந்த அட்வைஸ்.. கடைசி ஓவரில் போட்டி மாறியது எப்படி?

Recommended Video

WORLD CUP 2019: IND VS AFG: SACHIN | தோனி தான் சரியில்லை, குறி வைத்து விமர்சித்த சச்சின்!- வீடியோ

லண்டன்: நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஷமிக்கு இந்திய வீரர் தோனி கொடுத்த அட்வைஸ் போட்டியை மொத்தமாக மாற்றியுள்ளது. இந்த சம்பவம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

நேற்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டி கடைசி நொடி வரை விறுவிறுப்பாக சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த எளிமையான ஸ்கோரை நோக்கி நிதானமாக ஆடி வந்தது ஆப்கானிஸ்தான்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

அதன்பின் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷமி ஓவர் போட வந்து இருந்தார். அதற்கு முன்பு வரை ஷமி நன்றாகவே ஓவர் போட்டார். முக்கியமாக அவர் போட்ட 48வது ஓவர் மிக முக்கியமானதாக இருந்தது. இந்த ஓவர் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட் மொத்தமாக குறைந்தது. ஆனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் கடைசி ஓவரில் முதல் பந்தே அவர் பவுண்டரி கொடுத்து அதிர்ச்சி அளித்தார். நபிதான் எந்த பந்தை பவுண்டரி அடித்தது. நபி எந்த பந்தை எப்போது சிக்ஸுக்கு அனுப்பலாம் என்று காத்துக் கொண்டு இருந்தார். இதனால் அடுத்த பால் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்த பந்தை தூக்கி அடித்தார். ஆனால் அந்த பந்தல் சிங்கிள் மட்டுமே ஓட முடியும். ஆனால் நபி ஸ்ட்ரைக் வேண்டும் என்பதால் ஓடவில்லை. அந்த பால் டாட் பால் ஆனது.

தோனி அட்வைஸ்

தோனி அட்வைஸ்

இந்த நிலையில் தோனி ஷமியிடம் சென்று அறிவுரை கூறினார். முதல் பந்து பவுண்டரி போனது ஏன் என்று விளக்கினார். ஆப்கானிஸ்தான் பவுலர்கள் சரியான லைனில் யார்க்கார் வந்த பந்துகளை பார்த்து திணறினார்கள். இதை ஷமியிடம் கூறினார். அடுத்த பந்தில் இருந்து வரிசையாக மேஜிக் நிகழ தொடங்கியது.

மூன்று அவுட்

மூன்று அவுட்

ஷமி போட்ட பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடிக்க பார்த்தார் நபி. ஆனால் அதை கேட்ச் பிடித்தார் பாண்டியா. அதற்கு அடுத்த பந்தே ஷமி அப்தாப் ஆலமிற்கு பந்து போட்டார். 143 கிமீ வேகத்தில் வந்த இந்த யார்க்கர் பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மானுக்கு அதேபோல் லெக் ஸ்டம்பை பார்த்து யார்க்கர் போட்டார் ஷமி. அந்த விக்கெட்டும் காலி.

செம பாஸ்

செம பாஸ்

ஷமியின் இந்த ஹாட் டிரிக்கிற்கு தோனியின் அட்வைஸ் முக்கிய காரணம் என்கிறார்கள். ஆனால் அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஷமியின் அனுபவமும் அதற்கு மிக முக்கிய காரணம். ஒரு மாதமாக ஓய்வில் இருந்த வந்த ஷமிக்கு இதுதான் ஆகச்சிறந்த கம் பேக்.

Story first published: Sunday, June 23, 2019, 10:53 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+