Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்போதும் வாய்ப்பு கிடைக்காது.. அப்படியே போடு.. விஜய் சங்கரின் வாழ்க்கையை மாற்றிய தோனி அட்வைஸ்!

Recommended Video

விஜய் சங்கரின் வாழ்க்கையை மாற்றிய தோனி அட்வைஸ்!

லண்டன்: நேற்று விஜய் சங்கரின் அசத்தலான பவுலிங்கிற்கு பின் கீப்பிங் செய்து கொண்டு இருந்த தோனியின் பங்கு பெரிய அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று தோனி கொடுத்த முக்கியமான அட்வைஸ்தான் சங்கரின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறுகிறார்கள்.

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அசால்ட்டாக வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

நேற்று டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது. இதில் மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்று போட்டியில் மழை பெய்யாமல், 50 ஓவர்கள் போடப்பட்டு இருந்தாலும் பாகிஸ்தான் வெற்றிபெற்று இருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பேட்டிங் அந்த அளவிற்கு மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சங்கர் பேட்டிங்

விஜய் சங்கர் பேட்டிங்

நேற்று இந்திய அணி பேட்டிங் செய்த போது 4 விக்கெட் விழுந்த பின் விஜய் சங்கர் களமிறங்கினார். ஆனால் விஜய் சங்கர் தொடக்கத்தில் இருந்து மெதுவாக ஆடினார். அதிக ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் டெஸ்ட் போட்டி விளையாடிக் கொண்டு இருந்தார். தொடக்கத்தில் இருந்தே விஜய் சங்கர் மிக மோசமாக சொதப்பினார். அவர் 15 ரன்களில் 15 ரன்கள் மட்டும் கொடுத்தார்.

மிக மிக மோசம்

மிக மிக மோசம்

இதனால் ரசிகர்கள் எல்லோரும் அவரை திட்டி தீர்த்தனர். . ஏற்கனவே நிதாஸ் கோப்பையில் விஜய் சங்கர் இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக சொதப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது முறையாக விஜய் சங்கர் சொதப்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

அதன்பின் பவுலிங்கின் போது புவனேஷ்வர்குமார் 5 வது ஓவரில் காயம் பட்டார். அந்த ஓவரில் கடைசி 2 பந்துகளை போட விஜய் சங்கர் களத்திற்கு வந்தார். அதற்கு முன் 4 பந்துகளும் ஸ்விங் ஆகி சென்றது. சரியாக புவனேஷ்வர் குமார் போட்ட நான்கு பந்துகளும் ஸ்விங் ஆகி கால் அருகே சென்று பின் பேட்டில் பட்டது. இதனால் விஜய் சங்கர் போட்ட பந்தும் அப்படி வரும் என்று பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் நினைத்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனி சங்கரிடம், நீ ஸ்விங் போட வேண்டாம், சரியான லென்தில், சரியான லைனில் போடு என்று கீப்பிங்கில் இருந்து கொண்டு மீண்டும் மீண்டும் கூறினார். அதேபோல் அவரிடம் ஸ்லோ பால் போடும்படி கூறினார். சரியாக அந்த பந்தை தோனி சொன்ன மாதிரியே விஜய் சங்கர் வீசினார். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யு ஆனார்.

செம பாஸ்

செம பாஸ்

அதேபோல்தான் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது பேட்டிங் செய்த போது, இதுதான் நல்ல வாய்ப்பு, பந்து ஸ்விங் ஆகிறது நல்ல லைனில் போடு, தானாக விக்கெட் விழும் என்று குறிப்பிட்டார். அதே போல் பந்து சரியாக ஸ்விங் ஆகி, சர்ப்ராஸ் அவுட்டானார். இந்த இரண்டு விக்கெட்டுகள்தான் விஜய் சங்கர் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது. இல்லையென்றால் நேற்று அவர் செய்த மோசமான பேட்டிங்கிற்கு மீண்டும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு மூட்டை கட்டி இருக்க வேண்டியதுதான்.

Story first published: Monday, June 17, 2019, 13:10 [IST]
Other articles published on Jun 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+