Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ அங்க போய் நில்லு.. கோலியிடம் வாதம் செய்து தோனி கொடுத்த டிப்ஸ்.. போட்டியை மாற்றிய அந்த விக்கெட்!

Recommended Video

கோலிக்கு டிப்ஸ் கொடுத்த தோனி... போட்டியை மாற்றிய அந்த விக்கெட்!

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி கொடுத்த டிப்ஸ் ஆட்டத்தின் போக்கை முக்கியமான நேரத்தில் மாற்றி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்தியா பவுலிங் காரணமாக வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகளின் வீரர்கள் எல்லோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்கள். யாரும் நிலைத்து நின்று கொஞ்சம் கூட இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை.

வெற்றி

வெற்றி

நேற்று 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இதனால் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

 யார் விக்கெட்

யார் விக்கெட்

இந்திய அணி பவுலிங் போட்ட போது, ஒவ்வொரு மேற்கு இந்திய தீவுகள் வீரரையும் திட்டமிட்டு விக்கெட் எடுத்தனர். அதிலும் மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் ஹோல்டர் விக்கெட்டை எடுக்க தோனி போட்ட திட்டம் பெரிய வைரலாகி உள்ளது. அவர் கொடுத்த முக்கியமான ஐடியாதான் வலுவான ஹோல்டரை எளிதாக வீழ்த்த உதவியது.

கோலி என்ன செய்தார்

ஹோல்டர் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது 23வது ஓவரை சாஹல் வீசினார். அப்போது பீல்டிங் மாற்றிய கோலி கவர் திசையில் வீரர் ஒருவரை நிற்க வைத்தார். உடனே தோனி கோலியிடம் சென்று பேசினார். 2 நிமிடங்கள் வரை இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இன்னொரு வீரர் அங்கே இருக்க வேண்டும் என்று தோனி கேட்டார்.

 சாஹல் வந்தார்

சாஹல் வந்தார்

இதனால் எக்ஸ்டரா கவரில் கேதார் வந்து நின்றார். சரியாக அந்த பந்தை ஆப் சைடில் பெரிய ஸ்விங் இல்லாமல் போட்டார் சாஹல். திட்டமிட்டபடி அதை பவுண்டரி அடிக்க முயன்று வலையில் சிக்கினார் ஹோல்டர். சரியாக அந்த பந்து எக்ஸ்டரா கவரில் இருந்து கேதாரின் கையில் போய் விழுந்தது. சரியான நேரத்தில் தோனியும், கோலியும் பேசி போட்ட இந்த திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 28, 2019, 13:02 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+