Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் ஒரு யார்க்கரும்.. ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டும்.. கடைசி போட்டியில் மோதிக்கொள்ளும் 2 ஜாம்பவான்கள்

Recommended Video

Dhoni & Malinga : கடைசி போட்டியில் மோதிக்கொள்ளும் 2 ஜாம்பவான்கள்- வீடியோ

லண்டன்: கிரிக்கெட் உலகின் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இன்று கடைசியாக ஒருமுறை நேருக்கு நேர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மோத இருக்கிறார்கள்.

தோனிதான் இப்போதும் உலகில் சிறந்த பினிஷர். அவரை போல ஆட்டத்தை மாற்ற கூடிய வீரர்கள் யாரும் கிடையாது. அவர் இந்திய அணியில் இன்னும் சில வருடங்கள் விளையாட வேண்டும்.

குறைந்தது தோனி இரண்டு வருடங்களாவது விளையாட வேண்டும் என்று மலிங்கா நேற்று குறிப்பிட்டார். ஆம் தன்னுடைய டெத் ஓவரை 2011 உலகக் கோப்பையில் அடித்து துவைத்த அதே தோனி குறித்துதான் மலிங்கா இவ்வளவு புகழ்ந்து பேசி இருக்கிறார்.

நெருக்கமான நண்பர்கள்

நெருக்கமான நண்பர்கள்

மலிங்காவும் தோனியும் அந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் என்றும் கூட கூறலாம். ஐபிஎல்லில் ஏற்பட்ட நட்பு மலிங்கா - தோனி இடையே இப்போதும் நீடித்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் மூத்த வீரர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.

எப்படி இவர்கள்

எப்படி இவர்கள்

மலிங்காவிற்கு இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் முக்கியமானது. இலங்கை அணியே இவரை நம்பித்தான் இந்த தொடரில் களமிறங்கியது என்று கூட கூறலாம். அதேபோல் மலிங்காவும் இந்த தொடரில் மிகவும் சிறப்பாகவே விளையாடினார். தேவையான நேரத்தில் அணிக்காக விக்கெட் எடுத்து அசத்தினார்.

தோனி எப்படி

தோனி எப்படி

அதே சமயம் தோனிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் அத்தனை சிறப்பாக அமையவில்லை. எப்போதும் அவரிடம் இருக்கும் மேஜிக் இந்த தொடரில் நிகழவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில்தான் இரண்டு ஜாம்பவான் வீரர்களும் கடைசி தடவையாக களத்தில் தங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஆம் இருவருக்கும் இது கடைசி ஒன் -டு - ஒன் போட்டியாகும்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இந்த உலகக் கோப்பை தொடர்தான் இரண்டு வீரர்களுக்கும் கடைசி தொடர் ஆகும். அதேபோல் இன்று நடக்கும் போட்டியே இலங்கை - இந்தியா இந்த தொடரில் மோதும் கடைசி போட்டியாகும். அதனால் இரண்டு வீரர்களும் மோதும் இந்த கடைசி போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு லெஜெண்ட்களும் இன்று கடைசி யார்க்கருக்காகவும்.. கடைசி ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகவும் களமிறங்க இருக்கிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 13:40 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+