Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சத்தமே இல்லாமல் சாதனை செய்த தல தோனி.. பாக். போட்டியில் புதிய மகுடம்.. என்ன தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | பாக். போட்டியில் தோனிக்கு புதிய மகுடம்

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் தோனி புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

தற்போது உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடி வருகிறது. பவுலிங் பிட்சாக இருந்தாலும் இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.

சாதனை

சாதனை

பொதுவாக உலகில் சில வீரர்கள் மட்டும்தான் 10 வருடம் 15 வருடம் எல்லாம் கிரிக்கெட் உலகில் விளையாடி இருக்கிறார்கள். இந்திய அணியின் மூத்த வீரர் தோனி 2004ம் ஆண்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். அதன்பின் இந்திய அணியின் கேப்டன் ஆகி, பல்வேறு கோப்பைகளை நமக்கு வாங்கி கொடுத்தது வரலாறு.

சச்சின் எப்படி

சச்சின் எப்படி

அதே சமயம் இந்திய அணியில் சச்சின்தான் மற்ற வீரர்களை விட ஒருநாள் போட்டியில் அதிக முறை விளையாடி இருக்கிறார். இவர்தான் இந்திய அணியில் அதிக முறை 11 பேர் கொண்ட ஆடும் அணியில் இடம்பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் சச்சின் 463 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

அதே சமயம் ராகுல் டிராவிட் அவருக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டியில் அதிக முறை விளையாடி இருக்கிறார். இவர் இரண்டாவதாக அதிகமுறை இந்திய அணியில் 11 பேர் கொண்ட ஆடும் அணியில் இடம்பெற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் டிராவிட் 340 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

தோனி

தோனி

இந்த நிலையில் தற்போது ராகுல் டிராவிட்டின் சாதனையை தோனி முறியடித்து இருக்கிறார். இன்று இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் அவர் இந்திய அணிக்காக அதிக முறை ஒருநாள் அணியில் இடம்பிடித்த இரண்டாவது வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். அதன்படி தோனி 341 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற்று இருக்கிறார்.

பெரிய கஷ்டம்

பெரிய கஷ்டம்

இதில் அசாருதீன் 334 மற்றும் கங்குலி 308 அணிகளில் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். இதில் சச்சின் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 16:33 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+