For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பையோடு ஓய்வு பெறும் தோனி?.. விரைவில் அறிவிப்பு.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

Recommended Video

Dhoni Retirement? : தொடர் விமர்சனங்கள்.. தோனி கொடுத்த சிக்னல்- வீடியோ

லண்டன்: இந்த உலகக் கோப்பை தொடரோடு இந்திய அணியின் மூத்த வீரர் தோனி ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

உலகக் கோப்பை தொடர் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த தொடர் ஒன்றும் இந்திய வீரர் தோனிக்கு அத்தனை சிறப்பான தொடராக அமையவில்லை. ஆம் இந்த தொடரில் அவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை இந்திய அணி 7 போட்டிகளில் விளையாடியது. 7 போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சரியாக ஆடவில்லை.

சிக்கல்

சிக்கல்

பேட்டிங்கில் மட்டும் அவ்வப்போது சொதப்பும் தோனி இந்த முறை கீப்பிங்கிலும் சொதப்பினார். அதேபோல் டிஆர்எஸ் எடுப்பதிலும் தோனி இரண்டு முறை முக்கியமான நேரங்களில் சொதப்பினார். சென்ற போட்டியில் இவரால் களத்தில் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என்று பாதியில் வெளியேறி ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் தோனிக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சச்சின் தொடங்கி சேவாக் வரை தோனிக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தனர். தோனியின் ரசிகர்களே அவருக்கு எதிராக விமர்சனங்கள் வைத்த நிகழ்வும் அரங்கேறியது.

ஓய்வு

ஓய்வு

இந்த நிலையில்தான் இந்த உலகக் கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தியா விளையாடும் கடைசி உலகக் கோப்பை போட்டி எதுவோ அந்த போட்டியில் இருந்தே தோனி ஓய்வு பெறுவார் என்கிறார்கள்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு புதிய வீரர்களை தயார் செய்ய வேண்டும். தற்போது இருக்கும் இந்திய அணியின் தேர்வு வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்தோடு முடிகிறது.

புதியவர்

புதியவர்

அதன்பின் புதிய உறுப்பினர்கள் தேர்வு வாரியத்தில் இணைவார்கள். அவர்கள் வரும் முன் தோனி பதவி விலக வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். அப்போதுதான் 2020ல் நடக்கும் போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்ய எளிதாக இருக்கும் என்று தோனி முடிவெடுத்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, July 3, 2019, 16:47 [IST]
Other articles published on Jul 3, 2019
English summary
ICC World Cup 2019: Dhoni decides to retire for Odi may announce the end of this series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+