Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர் விமர்சனங்களால் வெறி, கோபம்.. விடாமல் பயிற்சி செய்த தோனி.. பயிற்சியாளர் சொன்ன திடுக் சீக்ரெட்!

Recommended Video

World Cup 2019 : Dhoni Practice: தொடர் விமர்சனங்களால் வெறி, கோபம்..விடாமல் பயிற்சி செய்த தோனி-வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி நேற்று நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி எடுத்தார். குறிப்பிட்ட சில ஷாட்களை அவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டத்தின் இன்று இந்தியா மற்றும் மேற்கு தீவுகள் அணிகளுக்கு இடையில் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் நன்றாக ஆடியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள். முக்கியமாக இந்திய வீரர் தோனி மிகவும் மோசமாக ஆடினார். தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார்.தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இதனால் தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தோனி இப்படி ஆடி இருக்க கூடாது. அவர் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக திணறுகிறார். அவர் முக்கிய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அவர் உடனே ஓய்வு பெற வேண்டும் என்று பல ரசிகர்கள் குறிப்பிட்டு இருந்தனர். தொடர்ச்சியாக தோனிக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

எப்படி ஆனது

எப்படி ஆனது

இதனால் தோனி கடுமையான மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தோனிக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டி. இதில் எப்படியாவது சரியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தோனி இருக்கிறார். இதனால் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

என்ன பயிற்சி

என்ன பயிற்சி

இந்த நிலையில்தான் தோனியின் பயிற்சி குறித்து இந்த அணியின் தேர்வு குழு தலைவரும், பேட்டிங் ஆலோசகருமான எம்எஸ்கே பிரசாத் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். தோனி எப்போதையும் விட கூடுதல் நேரம் பயிற்சி எடுத்து வருகிறார். நேற்று அவர் நீண்ட நேரம் பயிற்சி செய்தார்.

ஒரு ஷாட்

ஒரு ஷாட்

தோனி ஸ்வீப் ஷாட்களை மீண்டும் மீண்டும் அடித்து பழகினார். தொடர்ந்து பலமுறை இந்த ஷாட்களை அவர் அடித்து பார்த்தார். இது ஸ்பின்னர்களுக்கு எதிராக பெரிய அளவில் உதவும் என்று அவர் இப்படி பயிற்சி எடுத்தார். இந்திய அணியில் மற்ற வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள், என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Thursday, June 27, 2019, 9:24 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+