Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் மட்டுமா தவறு செய்தார்.. தோனியும் கூடத்தான் தவறு செய்தார்.. கேள்விக்கு உள்ளாகும் டிஆர்எஸ்!

Recommended Video

WORLD CUP 2019: SA VS NZ: கேள்விக்கு உள்ளாகும் டிஆர்எஸ்! சர்ச்சையில் வில்லியம்சன்,டி-காக்- வீடியோ

லண்டன்: நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முக்கியமான காரணம் ஒன்றுக்காக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான கட்டத்தில் நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவரில் 241 ரன்களை 6 விக்கெட் இழந்து எடுத்தது.

கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று தென்னாபிரிக்கா அணி இந்த போட்டியில் விளையாடியது.அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களை எடுத்து வென்றது.

யார் முக்கியம்

யார் முக்கியம்

இதில் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி திணறிய போது வில்லியம்சன்தான் மிகவும் நிதானமாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தார். நேற்று 138 பந்துகளில் இவர் 106 ரன்கள் எடுத்தார். இதுதான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

நேற்று இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் தனது கடைசி ஓவரை வீசிய போது, பந்து லேசாக வில்லியம்சன் பேட்டில் உரசி கீப்பர் டி காக் கைக்கு சென்றது. ஆனால் இது உறுதியாக விக்கெட்டா என்று எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது. நடுவர் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் தாஹிர் டிஆர்எஸ் கேட்க சொன்னார். உடனே தென்னாபிரிக்கா கேப்டன் டு பிளசிஸ், டி காக்கிடம் விக்கெட்டா என்று கேட்டார்.

விக்கெட் இல்லை

விக்கெட் இல்லை

ஆனால் டி காக், இது விக்கெட் இல்லை என்று குறிப்பிட்டார். இதனால் டு பிளசிஸ் டிஆர்எஸ் கேட்கவில்லை. ஆனால் பின் ரிப்ளேயில்தான் அது நல்ல விக்கெட் என்று தெரிந்தது. நேற்று இந்த டிஆர்எஸ் எடுக்கப்பட்டு இருந்தால் வில்லியம்சன் அவுட்டாகி இருப்பார். ஆட்டத்தின் போக்கே மாறி இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று டி காக் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

பெரிய விமர்சனம்

பெரிய விமர்சனம்

நேற்று டி காக்கை கமெண்ட்டிரியில் இருந்தவர்களே மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்து கொண்டு இருந்தனர். டி காக் செய்தது தவறு, அவர் இப்படி செயல்பட்டு இருக்க கூடாது என்று மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்தனர். அவர் டிஆர்எஸ் எடுத்து இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினார்கள். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

தோனி தவறு

தோனி தவறு

எப்போதும் டிஆர்எஸில் கலக்கும் தோனி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் முதல்முறை தவறு செய்தார். அந்த போட்டியில் குல்தீப் போட்ட ஓவர் ஒன்றில் தோனி ஒரு தவறு செய்தார். பாகிஸ்தானின் பாபர் அசம் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது சரியாக பாபர் குல்தீப் ஓவரில் எல்பிடபில்யூ முறையில் அவுட்டானார். இது விக்கெட்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இதற்கு தோனி டிஆர்எஸ் கேட்க வேண்டாம் என்றார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

ஆனால் அப்போது தோனிக்கு எதிராக இத்தனை பேர் மோசமாக கருத்து தெரிவிக்கவில்லை. தல தோனி தொடங்கி டி காக் வரை யாராக இருந்தாலும் களத்தில் எப்போதாவது தவறுகள் நடப்பது வழக்கமே. அது மனிதர்களின் இயல்பு. ஆனால் அதற்காக டி காக்கை மீண்டும் மீண்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்று தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Story first published: Thursday, June 20, 2019, 13:47 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+