For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி மீண்டும் இப்படி செய்துவிட்டாரே.. கடுப்பான ரசிகர்கள்.. தோல்வியை அடுத்து கடும் கொந்தளிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் மெதுவான ஆட்டமும் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு தோனியின் மெதுவான ஆட்டமும் முக்கிய காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது. இந்த இமாலய இலக்கை நோக்கை இந்திய அணி பொறுமையாக ஆடியது.

ஆனால் இந்திய அணியால் எவ்வளவு முயன்றும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ரன் ரேட் கொஞ்சம் நன்றாகவே இருந்தது. முக்கியமாக கோலி, ரோஹித் அவுட்டாகும் முன் நன்றாக அதிரடியாக ஆடினார்கள். அதேபோல் பாண்டியா தான் அவுட்டாகும் வரை மிகவும் அதிரடியாக ஆடினார்.

மோசம்

மோசம்

அதிலும் முக்கியமாக பாண்டியா மற்றும் பண்ட் ஆடும் போது இந்திய அணியின் ரன் ரேட் இங்கிலாந்து அணிக்கு ஈடாக இருந்தது. ஒரு ஓவருக்கு 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில்தான் இந்திய அணியின் ரன் ரேட் இருந்தது. ஆனால் போக போக இது மோசமாக சரிய தொடங்கியது.

ரன் ரேட்

ரன் ரேட்

தோனி களமிறங்கிய பின் இந்திய அணியின் ரன் ரேட் மோசமாக சுருங்கியது. ஒரு ஓவருக்கு 4 ரன்கள் என்று இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனால் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவியது. நிறைய ரன்கள் இலக்கு இருந்த போதும் தோனி அதிரடியாக ஆடவில்லை. அதேபோல் கேதார் ஜாதாவும் சிங்கிள் மட்டும் எடுத்தார்.

எப்படி அதிர்ச்சி

எப்படி அதிர்ச்சி

இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். தோனி ஏன் இப்படி ஆடுகிறார். ஏன் இப்போதும் கூட பொறுமையாக ஆடுகிறார் என்று பலர் அதிர்ச்சி அடைந்தார் கடைசியில் 14 பந்துக்கு 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்த பின் ரசிகர்கள் மனசு விட்டு போனார்கள். இந்த போட்டியை தோனியால் பினிஷ் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.

இந்தியா

இந்தியா

இதுவே கடையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் தற்போது தோனிக்கு எதிராக ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த மூன்று போட்டியிலும் தோனி இப்படித்தான் ஆடினார் என்று ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2019, 23:12 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
ICC World Cup 2019: Dhoni faces backlash after his slow innings against England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X