அரைசதம் அடித்து பேட்டை உயர்த்தியது.. உங்களுக்குத்தான் சச்சின்.. பதிலடி கொடுத்த தோனி ரசிகர்கள்!
Recommended Video
லண்டன்: இந்திய வீரர் தோனி அரை சதம் அடித்ததை அடுத்து அவரின் ரசிகர்கள் சச்சினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் இதனால் மறுபடியும் சச்சின் மற்றும் தோனி ரசிகர்கள் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. போட்டியில் என்ன நடக்கும், யார் வெற்றிபெறுவார் என்று அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் இந்திய பேட்டிங் சரியாக இல்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி மோசமாக ஆடி உள்ளது.

மொத்தம் எத்தனை
மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின் கேதார் 7 ரன்களுக்கு அவுட்டானார்.

இரண்டு பேர் மட்டுமே
இந்திய அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே பொறுப்புடன் ஆடினார்கள். கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர். தோனி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இதனால் இந்திய அணி கடைசி நேரத்தில் 268 ரன்கள் எடுத்தது.

சச்சினுக்கு பதிலடி
கடந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. இதனால் சச்சின் தோனியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவர் தனது பேச்சில், தோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். ஆப்கானிஸ்தான் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவ்வளவு மெதுவாக ஆட கூடாது, என்று குறிப்பிட்டார்.

இது போதுமா
இந்த நிலையில் இன்றைய போட்டி சச்சினுக்கு சிறந்த பதிலடி என்று தோனி ரசிகர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தோனி எப்போதும் பார்மில் இருக்கிறார் என்பதை சச்சினுக்கு தோனி நிரூபித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
செம
இவர், அரை சதம் அடித்துவிட்டு தோனி பேட்டை உயர்த்தியது.. ரசிகர்ளுக்கு இல்லை சச்சினுக்குத்தான்! #INDvsWI என்றுள்ளார்.
அவருக்குத்தான்
தோனி தனது பேட்டிங்கை சச்சினுக்குத்தான் டெடிகேட் செய்துள்ளார் என்று இவர் கூறி உள்ளார்.
யார் சிறப்பு
டியர் சச்சின், தோனி 61 பந்தில் 56 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 82 பந்தில் 72 ரன்கள் எடுத்துள்ளார். யார் பொறுமையாக ஆடியது என்று இப்போது சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications