5வது இடத்தில் களமிறங்காத தோனி.. கடைசியில் தலயை கைவிட்ட கோலி.. என்ன நடக்கிறது இந்திய அணியில்!
Recommended Video
லண்டன்: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் செய்யப்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்திய அணிக்குள் இதனால் என்ன நடக்கிறது, ஏதாவது பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மேற்கு இந்திய தீவுகள் இடையே தற்போது கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தொடக்கத்தில் நன்றாக ஆடிய இந்திய அணி தற்போது சரிவை நோக்கி சென்று வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு இந்திய தீவுகளின் கை இந்த போட்டியில் உயர்ந்து வருகிறது என்று கூட கூறலாம். இந்த போட்டியில் இந்திய அணி 250+ ரன்களை தாண்டுவதே சந்தேகம்தான் என்கிறார்கள்.

வரிசையாக விக்கெட்
இந்த போட்டியில் இந்தியா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 18 ரன்கள் இருக்கும் போது அவுட்டானார். அதே போல் கே எல் ராகுல் 48 ரன்கள் இருக்கும் நேரத்தில் அவுட்டானார். விஜய் சங்கரும் 14 ரன்களுக்கு அவுட்டானார். நிலையாக ஆடுவார் என்று கருதப்பட்ட கேதார் ஜாதவும் 7 ரன்களுக்கு அவுட்டானார்.

கோலி
இந்த போட்டியில் விஜய் சங்கர் அவுட்டான பின் முறைப்படி தோனிதான் களமிறங்க வேண்டும். அதிரடியாக ஆடுவதற்காக சமயங்களில் பாண்டியா களமிறங்குவது உண்டு. ஆனால் எப்போதும் இந்த இடத்தில் கேதார் ஜாதவ் களமிறங்கியதே இல்லை. ஆனால் இன்று கேதார் ஜாதவ் ஐந்தாவது இடத்தில் களமிறங்கினார்.

என்ன மோசம்
இதனால் தோனியை கோலி நம்பவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. மிகவும் மெதுவாக ஆடினார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. இதன் காரணமாக கோலி மீது நிறைய அழுத்தம் வந்து அவர் தேவையில்லாமல் அவுட்டானார்.

இதனால் மாற்றம்
இதற்கு எதிராக விமர்சனமும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்திய அணியின் பேட்டிங்கில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் தோனியை கோலியும் கைவிட்டு விட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. தோனிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை ஏற்கனவே 5வது இடத்தில் ஆடி வந்த இவர் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அவரின் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்குள் இதனால் என்ன நடக்கிறது, ஏதாவது பிரச்சனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications