
எப்படி
இந்திய அணி 140+ ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின் இந்தியா எப்படியும் 200 ரன்களை எடுப்பதே சிரமம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தோனி தன்னுடைய ஸ்டைலில் மிகவும் பொறுமையாக ஆடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை சேர்த்து விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார்.

எத்தனை ரன்கள்
தொடக்கத்தில் இவர் நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இதனால் தோனி 56 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் மெதுவான இன்னிங்ஸ் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

சச்சின் பேட்டி
சச்சின் தனது பேட்டியில், இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் கோலியின் நல்ல கேப்டென்சிதான். ஆனால் போட்டியை மாற்றியது யார் என்று கேட்டால் அது தோனிதான். அவரின் ஆட்டம்தான் போட்டியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. தோனி பாண்டியா சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இது மட்டும்தான்
அதுதான் முதல் பாதியில் போட்டியை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. அதனால்தான் நாம் 260+ ரன்களை எடுத்தோம். அவர் இல்லையென்றால் அவ்வளவு ரன்களை எடுத்து இருக்க மாட்டோம். கடைசி ஓவரில் அவர் 16 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி ஓவர் முழுக்கவும் அவர் ஸ்டிரைக் இருந்ததும் மிக சிறப்பாக விஷயம். இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று, சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள்
கடந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. இதனால் சச்சின் தோனியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் ரசிகர்களுக்கு இடையில் சண்டை வந்தது. தற்போது சச்சின் பேட்டி காரணமாக சண்டை போட்ட ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications