Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எங்களிடம் பேசவில்லை.. எதுவும் சொல்லவில்லை.. உடைந்த கோலி.. பரபரப்பு பேட்டி!

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | தோனி எதுவும் சொல்லவில்லை: உடைந்த கோலி- வீடியோ

லண்டன்: நேற்று போட்டி முடிந்த பின் தோனி எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்து இருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடைசி வரை போராடிய இந்திய அணி இதில் தோல்வியை தழுவி உள்ளது.

ஜடேஜா தோனி இருவரும் இந்திய அணிக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்கள். ஆனாலும் நியூசிலாந்து அதிரடியாக ஆடி பைனலுக்கு சென்றுள்ளது.

சிறப்பு

சிறப்பு

இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்தியா தோல்வியை நோக்கி நகர தொடங்கிவிட்டது. வரிசையாக இந்தியாவின் திறமையான பேட்ஸ்மேன்கள் எல்லாம் முதல் ஐந்து ஓவர்களிலேயே அவுட்டானார்கள். ஆனால் கடைசியில் தோனி, ஜடேஜா மட்டும் நம்பிக்கை அளித்தனர். அவர்களும் அவுட்டானதால் இந்தியா தோல்வியை தழுவியது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி அளித்தார். அதில், இன்றைய போட்டியில் தோனி மிகவும் சிறப்பாக ஆடினார். அவர் களமிறங்கிய இடம் மிக மிக அழுத்தம் நிறைந்தது. அவருக்கு பின் இந்திய அணியில் ஆட புவனேஷ்வர் குமார் மட்டும்தான் இருந்தார். அப்போதும் கூட தோனி சிறப்பாக ஆடினார்.

சிறப்பாக செய்தார்

சிறப்பாக செய்தார்

அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். மிக மோசமான கட்டத்தில் அவரை இறக்குவதே எங்களின் திட்டமாக இருந்தது. அவர் அதை இன்று செய்தார். அவர் மெதுவாக ஆடியது எங்களுக்கு கடைசி நேரத்தில் உதவியது. ஆனால் நியூசிலாந்து பவுலர்கள் மீண்டு வந்தது எங்களுக்கு எதிராக முடிந்தது.

எதுவும் பேசவில்லை

எதுவும் பேசவில்லை

தோனி எங்களிடம் எதுவும் பேசவில்லை. போட்டி முடிந்து நாங்கள் இன்னும் எதுவும் பேசவில்லை. அவர் தன்னுடைய எதிர்காலம் குறித்தும், ஓய்வு திட்டங்கள் குறித்தும் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. அதை பற்றி அவர்தான் முடிவெடுப்பார், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Thursday, July 11, 2019, 9:33 [IST]
Other articles published on Jul 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+