Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு கேட்ச்.. இலங்கை பேட்ஸ்மேன்களை அதிரவைத்த தல.. 4 விக்கெட்டுகளை நேர்த்தியாக வீழ்த்திய தோனி!

Recommended Video

இலங்கை பேட்ஸ்மேன்களை அதிரவைத்த தல தோனி

லண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் கீப்பர் தோனி எடுத்த விக்கெட்டுகள் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

இதில் இலங்கை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் களமிறங்க முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் மோசமாக திணறி வருகிறார்கள்.

முதல் விக்கெட்

முதல் விக்கெட்

பும்ரா போட்ட 4 வது ஓவரின் 4வது பதிலேயே இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்துவிட்டது. அப்போது இலங்கை வீரர் கருணாரத்னே பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். பும்ரா போட்ட ஷார்ட் பந்து எட்ஜாகி சரியாக ''வந்துட்டேன் மாமா'' என்று தோனி கையில் தஞ்சம் புகுந்தது. இதுதான் தோனி - பும்ரா ஜோடி செய்த முதல் சம்பவம்.

அடுத்த விக்கெட்

அடுத்த விக்கெட்

அதற்கு அடுத்த விக்கெட் 8வது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் பும்ரா ஓவரில் விக்கெட் விழுந்தது. அப்போது பும்ரா போட்ட ஷார்ட் லென்த் பந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த குசல் பெரேரா பேட்டில் பட்டு சரியாக மீண்டும் தோனி கையில் சென்று தஞ்சம் அடைந்தது. அடுத்த சம்பவத்தை செய்துவிட்டு பும்ரா - தோனி ஜோடி அமைதியாக இருந்தனர்.

சிஎஸ்கே மாயம்

சிஎஸ்கே மாயம்

11வது ஓவரின் 4 வது பந்தில் ஜடேஜா போட குசல் மெண்டிஸ் அவுட்டானார். இது அப்படியே சிஎஸ்கே ஸ்டைல் விக்கெட் என்று கூட கூறலாம். சரியாக அவுட் சைட் ஆப் ஸ்டம்பில் ஜடேஜா பந்து வீச, ஜடேஜாவிடம் குசலம் விசாரிக்க ஆசைப்பட்டு பிட்சை விட்டு குசல் இறங்கி வர பந்தை பிடித்து நொடிப்பொழுதில் ஸ்டம்பிட் செய்தார் தோனி.. எப்பா இந்த ஜோடியை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.

கடைசி விக்கெட்

கடைசி விக்கெட்

அடுத்த விக்கெட்டும் தோனியின் ஜாலம்தான். 12 ஓவரின் 4 வது பந்தில் அவிஸ்கா பெர்னாண்டோ பேட்டிங் செய்ய பாண்டியா பந்து வீசினார். அப்போது பாண்டியா போட்ட ஸ்லோ பவுன்சர் சரியாக எட்ஜாகி தோனி கையை நோக்கி சென்று கீழே விழ பார்த்தது. எங்க போற ராசாத்தி என்று அதை லாவகமாக பிடித்து கிளவுஸில் பூட்டி வைத்தார் தோனி. அசால்ட்டாக உருண்டு புரண்டு அவர் இந்த கேட்சை பிடித்தார்.

வாவ் எப்படி

வாவ் எப்படி

இதுவரை இலங்கை அணிகள் இழந்த 4 விக்கெட்டுக்கு பின்பும் தோனியின் பங்கு இருக்கிறது. முக்கியமாக ஜடேஜா ஓவரில் விழுந்த விக்கெட்.. அட இப்போ சொல்லுங்க பாஸ் தோனி இனியும் ரிட்டயர் ஆக வேண்டுமா என்ன?

Story first published: Saturday, July 6, 2019, 17:21 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+