தோனி லெஜண்ட்.. அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும்.. விமர்சகர்கள் வாயை அடைத்த கோலி!
Recommended Video
தோனி லெஜண்ட், அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும் என்று கூறி விமர்சகர்கள் வாயை கோலி அடைத்து இருக்கிறார்.
லண்டன்: தோனி லெஜண்ட், அவருக்கு எப்படி ஆட வேண்டும் என்று தெரியும் என்று கூறி விமர்சகர்கள் வாயை கோலி அடைத்து இருக்கிறார்.
நேற்று இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்றது. மொத்தம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72, பாண்டியா 46, தோனி 56 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

தோனி ஆட்டம்
இந்த போட்டியில் தோனி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடக்கத்தில் இவர் நிதானமாக ஆடினாலும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். இதனால் தோனி 56 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் மெதுவான இன்னிங்ஸ் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன சொன்னார்
கோலி இதுகுறித்து கூறுகையில், தோனிக்கு களத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தெரியும். ஆட்டத்தின் நடுவில் எப்படி விளையாட வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரின் ஒரே ஒருநாள் சரியாக அமையவில்லை என்றால் எல்லோரும் உடனே அதை பற்றி பேச தொடங்கி விடுகிறார்கள்.

ஆதரவாக நிற்போம்
நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக நிற்போம். எங்களுக்காக அவர் பல போட்டிகளை வென்று கொடுத்து உள்ளார். உங்களுக்கு அவசரமாக 15-20 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் தோனிதான் தேவைப்படுவார். அவர்தான் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்கு தேவையான ரன்கள் எடுத்து கொடுப்பார்.

என்ன அனுபவம்
அவரின் அனுபவம் காரணமாக 10ல் 8 போட்டிகள் எங்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழி நடத்த தோனியின் அனுபவம் தேவை. அவர் எப்போதும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார். 260 என்பது நல்ல இலக்குதான்.

தொடர வேண்டும்
அவர் இந்த போட்டியின் லெஜண்ட். அது அப்படியே தொடர வேண்டும். அவர் 300 ரன்கள் அடிக்க ஆசைப்பட்டு ஆடி அவுட்டாகி இருந்தால், 230 ரன்களுக்கு நாங்கள் சுருண்டு இருப்போம். கடைசி இரண்டு போட்டிகளில் வென்றாலும் , நாங்கள் சரியாக ஆடவில்லை. வரும் போட்டிகளில் அதை சரி செய்வோம், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications