தோனி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்.. இது எல்லாருக்குமே தெரியும்.. கடைசியில் கங்குலியே இப்படி சொல்லிட்டாரே!
Recommended Video
லண்டன்: தோனி குறித்த சச்சினின் விமர்சனத்தை தொடர்ந்து தற்போது தோனிக்கு ஆதரவாக கங்குலி பேட்டி அளித்து இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் திரில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் மோசமாக சொதப்பினார்கள்.
முக்கியமாக இந்திய வீரர் தோனி மிகவும் மோசமாக ஆடினார். தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார்.தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார்.

சச்சின் விமர்சனம்
தோனியின் இந்த விளையாட்டை சச்சின் விமர்சனம் செய்து இருந்தார். அவர் தனது பேச்சில், தோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். ஆப்கானிஸ்தான் பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக அவ்வளவு மெதுவாக ஆட கூடாது. தோனி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாசிட்டிவாக ஆடவில்லை. ஆனால் அவரின் ஸ்டிரைக் சென்ற முறை சரியாக இல்லை, என்று குறிப்பிட்டார்.

தோனிதான்
தற்போது தோனியின் ஆட்டம் குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார், அதில் தோனி ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கடைசியில் என்ன சொன்னாலும் அவரின் திறமையை யாராலும் மறுக்க முடியாது. அது எல்லோரும் தெரியும். இந்த முறையும் அவர் தன்னை நிரூபிப்பார். இந்த உலகக் கோப்பை அவருக்கானது.

நல்லவர்
ஆம் இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் அவர் தன்னை நிரூபிப்பார். ஆப்கானிஸ்தான் போட்டிக்கு எதிராக அவர் சரியான பார்மில் இல்லை. அவ்வளவுதான். அதில் பெரிய தவறு கிடையாது. அது ஒரே ஒரு போட்டிதான் என்று கங்குலி தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

நிலவுகிறது
இந்த நிலையில் கங்குலியின் பேட்டி காரணமாக, தோனிக்கு எதிராக வைக்கப்பட்டு வந்த கருத்துக்கள் கொஞ்சம் வீரியம் குறைந்து உள்ளது. கங்குலி ரசிகர்களும் தோனியை தொடர்ந்து ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஆனாலும் சச்சின் தோனி ரசிகர்கள் இடையில் இன்னும் புகைச்சல் இருக்கத்தான் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications