செப்டம்பர் 22.. கடைசி போட்டிக்கு நாள் குறித்த தோனி?.. ஓய்வு பெறுவதற்காக தல போட்ட சூப்பர் திட்டம்!
Recommended Video
லண்டன்: தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி ஓய்வு பெற இருக்கிறார். இதற்காக அவர் பல திட்டங்களை மனதில் வைத்து இருக்கிறார் என்கிறார்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கி அதிரிபுதிரியாக நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா ஆகிய பெரிய அணிகளை கூட இந்தியா எளிதாக வீழ்த்தி இருக்கிறது. இதனால் இந்தியா ஆட போகும் வருங்கால போட்டிகள் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறது.

தோனி பார்ம்
இந்த முறை இந்திய அணியில் எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தோனி மிகச்சிறந்த பார்மில் இருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் இதுவரை இருந்ததை விட கடந்த 6 மாதமாக இவர் மிக சிறப்பான பார்மில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு
இந்த உலகக் கோப்பைதான் தோனிக்கு கடைசி உலகக் கோப்பை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தோனி நல்ல பார்மில் இருந்தாலும் அவ்வப்போது அவருக்கு மூச்சுத் திணறல் உட்பட சில பிரச்சனைகள் வந்து செல்கிறது. களத்தில் நிற்கும் போதே சமயங்களில் இவர் முதுகு வலி பிரச்சனையால் கூட அவதிப்படுகிறார்.

என்ன செய்ய போகிறார்
இதனால் இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் தோனி ஓய்வு பெற இருக்கிறார். தோனி இந்த உலகக் கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவதற்கு முக்கியமான திட்டங்களை வைத்து இருக்கிறார் என்கிறார்கள். அதன்படி உலகக் கோப்பை முடிந்த உடனேயே தோனி ஓய்வு பெற மாட்டார். அதற்கு அடுத்து நடக்கும் தொடர் ஒன்றில் கலந்து கொண்டு ஓய்வு பெற போகிறார் என்கிறார்கள்.

என்ன தொடர்
அதன்படி இந்தியா தென்னாபிரிக்கா மோதும் டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது. இந்த தொடரில் டி 20 போட்டியில் கலந்து கொள்ளும் தோனி ஓய்வு பெற போகிறார் என்று செய்திகள் வருகிறது. பெரும்பாலும் செப்டெம்பர் 22ம் தேதி தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று செய்திகள் வருகிறது. இந்த போட்டி பெங்களூரில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஐபிஎல்
ஆனால் தோனி ஐபிஎல் போட்டியில் அடுத்த வருடம் விளையாடுவார். அடுத்த வருடம் அவர் விளையாடும் ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருக்கும். அதன்பின் மொத்தமாக அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications