Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்ற போட்டியில் சொதப்பல்.. அவரை உடனே இடமாற்ற வேண்டும்.. புதிய இடத்தில் களமிறங்கும் தோனி?!

Recommended Video

சென்ற போட்டியில் சொதப்பல்.. புதிய இடத்தில் களமிறங்கும் தோனி?

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியது. மிகவும் சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணியை கஷ்டப்பட்டுதான் இந்திய அணி கடைசி ஓவரில் வீழ்த்தியது.

இந்த போட்டியில் இந்தியா முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இதில் 213 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான். இந்த போட்டியில் தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார். இவரின் ஆட்டம் இந்திய ரசிகர்களை பெரிதும் பொறுமை இழக்க செய்தது. ஏன் தோனி டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல ஆடுகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

மோசமானது

மோசமானது

தேவையான பந்துகளை மட்டுமே அவர் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இவர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார். கீப்பர் இஷ்ரத் அலி கில் தோனியை ஸ்டம்பிட் செய்தார். இதுவும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

அந்த போட்டியில் தோனியின் மீது பெரிய அளவில் அழுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு விஜய் சங்கரின் சொதப்பலான ஆட்டமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவர் சரியாக 4 வது இடத்தில் ஆடி இருந்தால், அதன்பின் இறங்கிய தோனிக்கு இவ்வளவு அழுத்தம் இருந்திருக்காது. இந்த நிலையில் 4வது இடத்தில் ஆடும் வீரரை மாற்ற கோலி ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறார்.

யார் வருவார்

யார் வருவார்

பெரும்பாலும் இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. தேவையான நேரங்களில் இவர் அதிரடியாகவும் ஆட கூடியவர். இதனால் சங்கருக்கு பதிலாக இவரை களமிறக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றால் இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இவர்கள் இருவரில் யார் விஜய் சங்கருக்கு பதிலாக வந்தாலும் அவர்கள் 4வது இடத்தில் களமிறங்க மாட்டார்கள். பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில்தான் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 4 வது இடத்தில் பெரும்பாலும் தோனிதான் இனி வரும் போட்டிகளில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

தோனிக்கு 5 அல்லது 6 வது இடங்களை விட 4வது இடத்தில்தான் ரன் ரேட் அதிகமாக இருக்கிறது. அந்த இடத்தில் அவர் ஆடும் சமயங்களில் இந்திய அணி பெரும்பாலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் கோலியும் தோனியும் ஒன்றாக களத்தில் இருக்கும் போது அது இந்திய அணிக்கு இன்னும் பலம் சேர்க்கும். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Monday, June 24, 2019, 13:46 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+