Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட முடியாத நிலையில் கோலி.. தலைமை ஏற்கும் தல தோனி.. இந்திய அணியின் ஒருநாள் கேப்டன்?

Recommended Video

World cup 2019 | Kohli injury | ஆட முடியாத நிலையில் கோலி ! கேப்டன் யார்?- வீடியோ

லண்டன்: விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி, முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறுகிறார்கள்.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. மிக தீவிரமாக போட்டிகள் நடந்து வருகிறது. இனிதான் நிறைய முக்கியமான போட்டிகள் நடக்க உள்ளது.

நேற்று மிகவும் வலுவாக தென்னாப்பிரிக்கா அணியை வங்கதேசம் அணி அடித்து துவைத்து தோல்வி அடைய செய்தது. இந்த நிலையில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான போட்டிகள் வரும் 5ம் தேதி நடக்கிறது. இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தென்னாபிரிக்கா அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்வதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் போட்டியை தொடங்க வேண்டும் என்பதால் அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். தென்னாப்பிரிக்காவை எப்படியாவது வீழத்திவிடலாம் என்று இந்திய அணி கொஞ்சம் பாசிட்டிவ் மனநிலையில் இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் வலைப்பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டனும், நம்பிக்கையுமான கோலிக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பந்து பட்டதில் அவரின் கையில் பெருவிரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதுதான் இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரலில் பெரிய காயமாக ஏற்பட்டுள்ளது.

தாமதமாகும்

தாமதமாகும்

இவரின் விரலில் ஏற்பட்ட காயம் தற்போது ஆற வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். பெரு விரலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் தனது பேட்டை பிடிக்க அதிகமாக சிரமப்படுகிறார். இதனால் அவர் வரும் புதன் கிழமை நடக்கும் போட்டியில் களமிறங்குவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.

யார் வருவார்

யார் வருவார்

இதனால் இந்திய அணிக்கு 3வது இடத்தில் ஆடுவதற்கு புதிய பேட்ஸ்மேனை தேட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்திய அணிக்கு ஒருநாள் கேப்டனை மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாக இரண்டு பேர் வருவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இரண்டு பேர்

இரண்டு பேர்

அதன்படி இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக தோனி வருவதற்கு வாய்ப்புள்ளது. அவருக்குத்தான் அதிக அனுபவம் இருப்பதால் அவர் கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளது. இல்லையென்றால். ரோஹித் சர்மா நல்ல கேப்டென்சி ரெக்கார்ட் வைத்து இருப்பதால் அவரும் கூட கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளது.

Story first published: Monday, June 3, 2019, 10:29 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+